பட வாய்ப்பிற்காக என்னையும் – சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபத்தை பகிர்ந்த கிரண்.

0
1262
- Advertisement -

பட வாய்ப்புக்காக என்னை அது போல செயல்களில் ஈடு பட சொன்னார்கள். தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் அஜித்தின் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது என்னவோ பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘வின்னர்’ படத்தில் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தில் இடம்பெற்ற பாடலில் பிகினி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்தார் நடிகை கிரண். ஆனால் அந்தப் படத்திற்கு பின்னர் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தமிழில் ஒரு சிலகாலம் காணாமல் போன கிரண் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் விஷாலின் அத்தையாக நடித்திருந்தார்.

- Advertisement -

இறுதியாக நடித்த படம் :

இறுதியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண். கடந்த சில காலமாகவே உடல் எடை கூடி படு பருமனாக மாறிவிட்டார். சமீப காலமாக உடல் எடையை குறைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார். ஆனால், தனது உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டு வருகிறார் கிரண்.

அவர் கூறிய தகவல்:

இது குறித்து போட்டியில் அவர் கூறிய போது “நான் தென்னிந்தியங்களில் பிரபலமானது இந்தியில் நடிக்க சென்று அங்கு எனக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காததால் நான் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து விட்டேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்ட பிறகு அவர்களின் சுயரூபத்தை காட்டுகிறார்கள். இன்று இருவருக்கு வருவாய் என இல்லையா என்று என்னிடம் சர்வ சாதாரணமாக கேட்பார்கள்.

-விளம்பரம்-

நான் அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறிவிடுவேன். நடிப்பை விட்டு விட்டு ஏதாவது தொழில் செய்யலாம் என்றும் யோசித்து இருந்தேன். நான்கு வருடங்கள் ஒருவரை காதலித்த பின் அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்த உடனே அவர் உறவை முறித்து விட்டேன். தற்போது அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விட்டது பட வாய்ப்புகளும் வருகின்றது. நான் தற்போது யாரையும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் எண்ணம் இல்லை என்றும் அவர் பேட்டி அளித்திருந்தார்.

Advertisement