இப்படி ஒரு நபருடன் ஒருவர் எப்படி வாழ முடியும் – தினேஷ் – ரஷிதா குறித்து வாய் கூசாமல் சொன்ன பயில்வான் – பதிலடி கொடுத்த தினேஷ்.

0
1025
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதில் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரிந்த தினேஷ் – ரஷிதா ஜோடி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். மீப காலமாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார். இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிய வில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுஇருந்தார் . ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. மேலும், இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால், சமீபத்தில் தன்னுடைய குடும்ப பிரச்சினை குறித்து தினேஷ் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். கணவன் மனைவி பிரச்சனை என்றால் நண்பர்கள் என்ற பெயரில் மூன்றாவது நபர் தலையிடுவது தான் பிரச்சனை பெரிதாகிறது.எங்கள் பிரச்சனையிலும் அப்படி தான் நடந்திருக்கிறது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ரஷிதா பிரிந்து சென்றத்துக்கு தினேஷ் தான் காரணம் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

தினேஷிற்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் தினமும் குடிப்பதோடு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் சுற்றி வந்ததாகவும் இப்படி ஒரு நபருடன் ஒருவர் எப்படி வாழ முடியும். அதனால் தான் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து விட்டார் என்றும் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தினேஷ் ‘நான் பெண்களுடன் சுற்றியதையும் குடித்ததையும் இவர் நேரில் வந்து பார்த்தாரா ? தனக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது தற்கெல்லாம் ரியாக்ட் ஆகி நான் அவரிடம் சண்டை போட்டு என்னுடைய டைமை வேஸ்ட் பண்ண விரும்பவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வரம்பு மீறி பேசினால் நான் அதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Dinesh

மேலும் பேசிய அவர் ‘எனக்கும் ரக்ஷிதாவிற்கும் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் விவாகரத்து ஆகவில்லை. பிக் பாஸில் ரக்ஷிதா கலந்து கொண்ட போது அவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைத்தேன். ஒருவேளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றி பெற்று கொடுக்கலாம். ஆனால், எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விருப்பமில்லை. நான் இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன் என்று ரக்ஷிதாவை நினைத்து வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

Advertisement