பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாகவே பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது.
இதனால் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படங்களின் ரீ மேக்கில் பாலிவுட் நடிகர்கள் பலர் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக்கி இருக்கிறது. இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும் ஆவார். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் சல்மான் கான் அஜித்தாகவும், பூஜா ஹெக்டே தமன்னா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதனை கண்ட தமிழ் ரசிகர்கள் பலரும் வீரம் பட ரீ-மேக்கா இது என்று கேலி செய்தனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தில் இருந்து ன்டம்மா என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் சல்மான்கான், வெங்கடேஷ், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடனமாடியிருந்தார்கள்.
— ƒαιzι тωιтѕ ♡ (@PranavKVFC) April 18, 2023
இந்த பாடலில் மூவருமே சட்டையுடன் காலில் ஷூ அணிந்துகொண்டு கோவிலில் நடனமாடிருந்தார்கள். தற்போது இந்த பாடலை கொச்சைப்படுத்தும் விதமாக நடனம் ஆகி இருப்பதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்து இருந்தது. அதிலும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ராம் சரண், வெங்கடேஷ் ஆகியோர் இதுபோன்ற கலாசார சீரழிவில் ஈடுபடுவதா என்று நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வந்தனர்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறியது, தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்த செயல் இருக்கிறது. இது லுங்கி இல்லை வேஷ்டி. பெருமைக்குரிய உடையை. ஆனால், இந்த பாடலில் கேவலமான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதா? ஒரு கலாச்சார உடையை அருவருப்பான முறையில் காட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறி இருந்தார்.
Fixed it y’all🥰 pic.twitter.com/jA1FITqWCz
— Shooo (@shewwwwwwww) April 19, 2023
இந்த நிலையில் இப்பட பாடல் ஒன்றில் சல்மான் கான் தனது வேட்டியை தூக்கிக்கொண்டு ஆடும் டான்ஸ் ஸ்டெப் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. என்னடா டான்ஸ் ஸ்டெப் இது என ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஜானி நடனம் அமைத்திருக்கிறார். ஜானி நடன இயக்குநராக பணியாற்றிய தமிழில் வெளியான பாடல்களும் இதுபோல விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Jaani master 😂 https://t.co/VBv2K2SoCE
— 𝕂𝕒𝕣𝕥𝕙𝕚 🍁 (@Aloner_boy) April 19, 2023
ஏற்கனவே நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியிருக்கும் “கைதி” ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஆதரப்தியை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் நடித்து வரும் வீரம் ரீமேக் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.