‘மறுபடியும் தாய் செண்டிமெண்ட்’ எப்படி இருக்கிறது கோடியில் ஒருவன் – முழு விமர்சனம் இதோ.

0
4304
kodiyil
- Advertisement -

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது வெளிவந்து உள்ள படம் கோடியில் ஒருவன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா, ஹரீஷ் அர்ஜுன் இசையமைத்துள்ளார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த படம் வெளியாகி இருப்பதால் திரைப்படத்தின் விமர்சனத்தை வாங்க போய் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார் தனது மகன் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். தாயின் கனவை நினைவாக்க சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. பின் சென்னையில் ஹவுசிங் போர்டு பகுதியில் தங்குகிறார். பின் அவர் ஹவுசிங் போர்டு பகுதியில் தரத்தையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த நினைக்கிறார்.

இதற்காக சில விஷயங்களை விஜய் ஆண்டனி செய்ய முயல்கிறார். இதனால் வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? தன் தாயின் கனவை நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. வழக்கம்போல விஜய் ஆண்டனி படத்தில் தன் நடிப்பு திறனை சூப்பராக செய்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் வேற லெவல் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

நாயகி ஆத்மிகாவுக்கு படத்தில் அதிகளவு காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த காட்சியில் அழகாக நடித்துள்ளார். மேலும், படத்தில் நிறைய வில்லன்களை காண்பித்து உள்ளார்கள். அதிலும் குறிப்பாக கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜீ உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். சூப்பர் சுப்புராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் அம்மாவாக படத்தில் திவ்யா பிரபா நடித்து இருப்பார். அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்ட வைத்தது. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை இயக்குனர் திறமையாகக் கையாண்டு உள்ளார். ஒரு கவுன்சிலர் என்னவெல்லாம் செய்ய முடியும் அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதையும் புது முயற்சியில் இயக்குனர் காட்டியிருக்கிறார். ஹீரோ வெற்றி பெறும் காட்சிகள் மட்டும் இல்லாமல் தோற்கும் படியான காட்சிகள் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது.

பிளஸ்:

படத்தில் இசையும், ஒளிப்பதிவும் பலம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். சொல்லுவதற்கு வேறு ஒன்றும் இல்லை.

மைனஸ்:

திரைக்கதையை அழுத்தமாக கொண்டு சென்றிருந்தால் படம் வேற லெவல்ல இருந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

திரைக்கதையின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி இருந்தால் கோடியில் ஒருவன் ஆக இந்த படம் அமைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் கோடியில் ஒருவன் தனியாக தெரியவில்லை.

Advertisement