இது மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை வைத்து 5 லட்சம் கோடி வியாபாரம் நடந்து இருக்கும் – மோகன் ஜி பகிர்ந்த புகைப்படம்.

0
415
- Advertisement -

ஏரியின் புகைப்படத்தை பதிவிட்டு மோகன் ஜி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தற்போது தமிழகம் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

நேற்று காற்றின் வேகம் குறைந்து மழை பெய்யும் அளவும் குறைந்திருப்பதால் மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மிக்ஜாம் புயல்: மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் உதவி தேவைப்படுபவர்களும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு உதவி கேட்டு வருகிறார்கள். இதனால் அரசு அதிகாரிகளும் விரைந்து உதவி செய்து வந்தார்கள்.

மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னை தான். அதிலும் நீர்நிலைகள் உள்ள பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தான் இந்த மழை சேதத்திற்கு காரணம் என்று பலர் கூறி வரும் நிலையில் வேளச்சேரியின் அன்றும் – இன்றும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

-விளம்பரம்-

அவரின் அந்த பதிவில் 1980 ஆம் ஆண்டு இருந்த வேளச்சேரியின் புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் அடங்கி இருக்கிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மோகன் ஜி ‘இந்த படங்கள் எல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மட்டுமே 5 லட்சம் கோடி வியாபாரம் நடந்து இருக்கும்.. கடந்த 53 ஆண்டுகளில் நடந்த முறைகேடு இது..’ என்று பதிவிட்டுள்ளார். சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர்.

குறிப்பாக சென்னையில் உள்ள வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (டிசம்பர் 6) காலை நிலவரப்படி சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement