வாட்டர் பாட்டில் விற்கும் சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய கேபிஒய் பாலா – குவியும் வாழ்த்துக்கள்

0
135
- Advertisement -

வாட்டர் பாட்டில் விற்கும் சிறுவனின் வாழ்க்கையை கே பி ஒய் பாலா மாற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்க்காக பதில் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் கோமாளிகள் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

KPY பாலா:

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:

பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருக்கிறார்.
அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட பாலா மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அதோடு பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் வாட்டர் பாட்டில் விற்கும் சிறுவனின் வாழ்க்கையை பாலா மாற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிறுவன் வாழ்க்கையை மாற்றிய பாலா:

அதாவது, சிறுவன் ஒருவன் குடும்ப சூழ்நிலைக்கு பள்ளிக்கு செல்லாமல் வாட்டர் பாட்டிலை விற்றுக் கொண்டிருந்தார். அதை பார்த்த பாலா, உன்னுடைய ஒரு வருடத்திற்கு தேவையான படிப்பு செலவிற்கு நான் உதவி செய்கிறேன். நீ படி என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த சிறுவனுக்கு மருத்துவராக வேண்டும் என்பது தான் ஆசையாம். அந்த ஆசையையும் நான் நிறைவேற்றுகிறேன் என்று பாலா நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

பாலா பதிவிட்ட வீடியோ:

பின் இது தொடர்பாக பாலா பதிவிட்ட வீடியோவில், நான் இந்த பெட்ரோல் பங்கிற்கு தினமும் சென்று வருகிறேன். இந்த பையன் தண்ணீர் பாட்டில்களை விற்பதை ஒரே முறை தான் பார்த்தேன். ஏன் இப்படி பள்ளிக்கு போகாமல் இருக்கிறாய்? என்று கேட்டதற்கு அவருடைய குடும்ப சூழல் சொன்னான். அவனுடைய தாயாரை நேரில் சந்தித்து படிப்பிற்கான கல்வி தொகையை கொடுத்து இருக்கிறேன். அவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Advertisement