25 ஆண்டுக்கு முன் இப்படி ஒரு வீட்டில், இன்று சொந்த ஊரில் பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ள Kpy பிரபலம். குவியும் வாழ்த்துக்கள்.

0
1244
dheena
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான்.கைதி திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். தற்போது கைது பட இயக்குனர் இயக்கியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கே.பி.ஒய் பிரபலமான தீனா டைமிங்க்ள் காமெடி செய்வதில் வல்லவர். இவரின் டைமிங் காமெடிக்காகவே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகர் தீனா தன்னுடைய சொந்த ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்றது. மேலும் கிரகப்ரவேசத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் அதனுடன் “ஒரு House என்பது சுவர் மற்றும் தூண்களால் கட்டப்படுகிறது. ஆனால் இந்த வீடு காதல் மற்றும் கனவுகளினால் கட்டப்பட்டது என்று சொந்த ஊரில் வீட்டின் புகைப்படத்தை பகிந்துள்ளார். புது வீடு வாங்கிய தீனாவிற்கு விஜய் டிவி பிரபலங்களாக இருக்கும் கே.பி.ஒய் பாலா, பிரியங்கா, தேஷ்பாண்டே, சுனிதா, அதுல்யா ரவி, ரித்திகா, ராமயா பாண்டியன் போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இவரது ரசிகர்களும் புது வீடு காட்டியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement