புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களின் கணவர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் மறைந்த வேலாயுதன் நாயர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த வெற்றித் திரைப்படமான “ராமன் எத்தனை ராமனடி”, நவரசத் திலகம் ஆர்.முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து, திரு.காரைக்குடி நாராயணன் அவர்கள் வசனம் எழுதிய வெற்றித் திரைப்படமான “தீர்க்க சுமங்கலி” என்ற படத்தில் நடித்து இருந்தார்.
நாகேஷ், முத்துராமன் ஆகியோருடன் கே.ஆர்.விஜயா அவர்கள் முதல் முதலில் அம்மன் வேடம் ஏற்று நடித்த “நம்ம வீட்டுத் தெய்வம்” மற்றும் திருடி, சூதாட்டம், கஸ்தூரி விஜயம், அன்னபூரணி, மேயர் மீனாட்சி என சுமார் 80 திரைப்படங்கள் தயாரித்ததோடு சில படங்கள் உருவாவதற்கு நிதி உதவியும் செய்தவர் வேலாயுதன் நாயர். விஜயாம்பிகா பிலிம்ஸ் “நாடகமே உலகம்” மற்றும் வள்ளிநாயகி பிலிம்ஸ் “நான் வாழவைப்பேன்” ஆகியவை கே.ஆர்.விஜயா அவர்களின் சொந்தப்படம்.
சுதர்சன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவன அதிபர் மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூரு வில் பல நட்சத்திர ஓட்டல்களும் வேலாயுதம் நாயருக்கு இருந்தன. தவிர சொந்தமாக கப்பல் மற்றும் விமானமும் அவருக்கு இருந்தது. ஏராளமான தொழில் நிறுவனங்களையும் திறம்பட நடத்தியவர். கே.ஆர்.விஜயா அவர்கள் பி.மாதவன் அவர்கள் இயக்கிய “முகூர்த்த நாள்” திரைப்படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் நடித்தார்.
இந்தப்படத்துக்காக இயக்குனர் பி.மாதவன் அவர்களுக்கு நிதி உதவி செய்தவர் வேலாயுதன் நாயர். இந்தப்படத்தின் வெளியூர் ஷூட்டிங் போது தான் கே.ஆர்.விஜயா – வேலாயுதன் நாயர் இருவருக்குமிடையே காதல் மலர, அதுவே இவர்கள் இருவரின் “முகூர்த்த நாள்” ஆகவும் அமைந்தது. இந்த தம்பதியருக்குப் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தை ஹேமலதா.முகூர்த்த நாள் படத்துக்குப் பின் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார்
இந்த நிலையில் தான் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் தனது அடுத்த தயாரிப்பான “அக்கா தங்கை” படத்துக்கு சௌகார் ஜானகி அவர்களின் தங்கையாக கே.ஆர்.விஜயா அவர்களை ஒப்பந்தம் செய்ய அவர் வீடு தேடி வந்து கேட்க, விஜயா மறுத்தார். தேவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காத விஜயாவை கணவர் வேலாயுதன் நாயர் தேவரிடம், விஜயா நடிப்பா. நீங்க படப்புடிப்புக்கான ஏற்பட்டை செய்யுங்க என்று தேவருக்கு உத்தரவாதம் தந்து, விஜயா அவர்களை மீண்டும் நடிக்க காரணமாக இருந்தார்.
அமைதியும் நல்ல குணமும் கொண்ட மனிதர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சின்னப்பா தேவர், பி.மாதவன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், இயக்குனர் டி.யோகானந்த், வசனகர்த்தா காரைக்குடி நாராயணன் என அனைவரிடமும் பழக்கம் உண்டு. இனிமையாகப் பழகியவர் வேலாயுதன் நாயர்.கே.ஆர்.விஜயா – வேலாயுதன் நாயர் இருவரைப் பற்றியும் மறைந்த ஆரூர்தாஸ் அவர்கள் தனது “சினிமாவின் மறுபக்கம்” என்ற நூலில், “பிறருக்கு வழங்கி மகிழ்வதில் விஜயாவாகட்டும் அவரது கணவர் வேலாயுதமாகட்டும் இருவருமே சிறந்தவர்கள். கொடுக்கும் குணம் இரும்புப் பெட்டியில் இருந்து அல்ல – இதயத்திலிருந்தும், ரத்தத்திலிருந்தும் வருவது”