எனக்கு 46 உனக்கு 18 – சூர்யாவிற்கு ஜோடியாகும் இளம் நாயகி ? அதுவும் இந்த இயக்குனர் படத்தில்

0
472
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் சூர்யா துணிந்தவன்.

-விளம்பரம்-

இப்படம் சமீபத்தில் தான் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. ஆனால், பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் படம் வெளியானது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது. அதோடு இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படம்:

மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலா, நடிகர் சூர்யாவை வைத்து திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், பாலா– சூர்யா இணைப்பில் உருவாக இருக்கும் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

பாலா – சூர்யா திரைப்பயணம்:

பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே போல் கடைசியாக பாலா அவர்கள் ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து உருவாக உள்ள இந்த படம் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்துள்ளது.

-விளம்பரம்-

மீண்டும் சேரும் சூர்யா-ஜோதிகா:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அதுமட்டுமில்லாமல் ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் சூட்டிங் மதுரையில் தொடங்க உள்ளது. இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் மீண்டும் சூர்யா – ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவுடன் நடிக்கும் நடிகை:

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், தற்போது தெலுங்கு திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தான் இந்த படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இவருக்கு 18 வயது தான் ஆகிறது. இதில் இவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதோடு படத்தில் ஜோதிகா இருக்கும் போது சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி வருவாரா? என்று ஒரு பக்கமும் பேசப்படுகிறது.

Advertisement