தேவா இசையில் நான் பாட மறுத்த பாடல், இளையராஜா கூறிய அறிவுரை – சித்ரா பகிர்ந்த சுவாரசியம்.

0
630
- Advertisement -

இசையமைப்பாளர் தேவா இசையில் பாட முடியாதுன்னு சொன்னதற்கு காரணம் இதுதான் என்று பாடகி சித்ரா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார் சித்ரா. இவர்1985 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து பைரவி என்ற படத்தில் இடம்பற்ற நான் ஒரு சிந்து என்ற பாடலின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் பாடகியாக அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். மேலும், இவர் ஏராளமான மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்து இருக்கிறார். அதோடு இவர் தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறார். பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவருடைய குரலை வைத்தே சித்ரா தான் பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

- Advertisement -

சித்ரா திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடி இருக்கிறார். இவரது பாடலுக்கும் இனிமையான குரலுக்கும் இன்றளவும் லட்சக் கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது சித்ரா அவர்கள் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் அனைவரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலையும் சித்ரா பாடியிருக்கிறார்.

சித்ரா அளித்த பேட்டி:

இப்படி இவர் இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் வி உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் படங்களை பாடியிருக்கிறார். ஆனால், இசையமைப்பாளர் தேவா இசையில் பாட முடியாது என்று சித்ரா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் சித்ரா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஆரம்பத்தில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்களை கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

தேவாவிடம் சொன்னது:

நான் பாடும்போது ஒரு தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் பாட வாய்ப்பு வந்தது. அந்த பாடலில் முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால், நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வதென்று யோசித்தேன். ஆனால், தேவா சார் அமைதியானவர். அதனால் அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார்? ரொம்ப வல்கராவாக இருக்கிறது என்று சொன்னேன். அவரும் சரிமா மாற்றி தர நான் முயற்சி செய்கிறேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் நான் சொல்றேன்.

இளையராஜா சொன்னது:

நீங்க இப்போ கிளம்புங்கள் என்று சொன்னார். அதன் பிறகு என்னை கூப்பிடவே இல்லை. சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டுடியோக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து, தேவா சார் ஸ்டுடியோவில் பாட முடியாது என்று சொன்னாயா? என்று கேட்டார். ஆமாம் சார், வரிகள் கொஞ்சம் வல்கராவாக இருந்தது. அதுதான் சொன்னேன். அதற்கு அவர், அதையெல்லாம் நீங்கள் ஏன் பாக்குறீங்க? உங்க வேலை பாடுவது மட்டும் தான். எந்த கவிஞரும் வேண்டும் என்று அவ்வாறு எழுத மாட்டார்கள். கதைக்கு தேவையானதை தான் எழுதுவார்கள். அவர்களுடைய எழுத்துக்கு குரல் கொடுப்பது தான் உன் வேலை என்று சொன்னார். அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement