ரஜினி, ஜெயலலிதாவிற்கு இருந்த பிரச்சனை, படையப்பா ரகசியம் சொன்ன ரவிகுமார் – 96ல் ஜெயலலிதா குறித்து ரஜினி பேசிய வீடியோவுடன் இதோ.

0
461
- Advertisement -

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் குறித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்றென்றும் கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் வசூலில் சாதனை படைத்தது. காலம் கடந்தாலும் படையப்பா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார். இந்த படம் ரிலீஸான போது ரஜினிகாந்திற்கும், ஜெயலலிதாவிற்கும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, ஜெயலலிதா, ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா? இல்லையா? என்று கேட்டிருந்தார்.

ரஜினி-ஜெயலலிதா சண்டை:

இதற்கு ரஜினி, நான் கருப்பு பணம் வாங்கியது இல்லை என்று சொன்னால் பொய். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பு பணம் வாங்கியிருந்தேன். அதற்கு பிறகு எனக்கு புத்தி வந்து நான் கருப்பு பணம் வாங்குவது குறைத்துக் கொண்டேன். சினிமா துறையைப் பற்றி தெரிந்து கொண்டே ஜெயலலிதா அவர்கள் கருப்பு பணத்தை பற்றி கேள்வி எழுப்புவது நினைத்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயலில் இறங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

கேஸ் ரவிக்குமார் பேட்டி:

இப்படி இவர்கள் இருவருக்கும் மத்தியில் சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து கொண்டே இருந்தது. இதனால் அவர்கள் இருவரையும் மையமாக வைத்து தான் படையப்பா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக கேஸ் ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர், படையப்பா படம் வெளிவந்த போது நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை வைத்து தான் எழுதப்பட்டது என்றெல்லாம் சொன்னார்கள்.

நீலாம்பரி படம் குறித்து சொன்னது:

அது உண்மைதான். அப்படி ஒரு பிடிவாதமான பெண் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்த போது ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எழுதினேன். காரணம், அந்த அளவிற்கு ஒரு தைரியமான ஸ்ட்ராங்கான பெண் இந்த கதாபாத்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ரஜினி -ஜெயலலிதா இடையே இருந்த சண்டை மற்ற நாடுகளுக்கு எல்லாம் தெரியாது. ஜப்பானில் படம் வெற்றி பெற்றது என்றால் அதற்கு கதை பிடித்துப் போனதனால் தான். அதேபோல் எடிட்டிங், பாடல்கள் எல்லாமே சேர்ந்தது தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement