இன்னும் அப்டேட்டே வரல.! அதுக்குள்ளயே தி மு க எம் எல் ஏ செய்த டீவீட்டை பாருங்க.!

0
671
Vijay63

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

Image result for mla anbalagan

இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் இந்த படத்தை பற்றிய வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அப்படியே இந்த படத்தின் அப்டேட் என்று படக்குழு வெளியிட்டாலும் அது ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விடைமயமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் இன்று (ஜூன் 19 ) இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அதில் ‘இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 யின் அப்டேட். காத்துக்கொண்டிருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ-வும், சினிமா தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement