பல ஹீரோக்களை உருவாக்கிய தயாரிப்பாளரின் மகனின் படம் – வெளிவரவில்லை என்றாலும் பலரின் பேவரைட்டாக அமைந்த படால்.

0
535
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் கேடி குஞ்சுமோன். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் எழுத்தாளர், அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த பின்பு திரைப்பட தயாரிப்பாளராக நினைத்தார். இந்த இவர் பயணம் முகமை வணிகத்திலும், விடுதி தொழில் துறையிலும் பணியாற்றி இருந்தார். அதற்கு பிறகு இவர் விநியோகஸ்தராக சினிமா துறையின் நுழைந்தார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாள மொழியிலும் 350 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருந்தார்.

-விளம்பரம்-

குறிப்பாக, தமிழில் இருந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிறமொழிகளுக்கு இவர் பல படங்களை மொழி மாற்றவும் செய்திருக்கிறார். அதற்குப்பின் மலையாளத்தில் தான் இவர் படங்களை தயாரிக்க தொடங்கினார். மேலும், இவரை 90 காலகட்டத்தில் தமிழில் படங்களை தயாரிக்க தொடங்கினார். இவர் ஏ ஆர் எஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பில் நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்திருக்கிறார். குறிப்பாக இவருடைய தயாரிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

- Advertisement -

குஞ்சுமோன் திரைப்பயணம்:

இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரித்து இருக்கிறார். தற்போது இவர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ சூப்பர் ஹிட் திரைப்படம். இதில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், மதுபாலா ராஜன்.பி.தேவ், சரண் ராஜ், சுபஸ்ரீ, வினித், மனோரமா, நம்பியார், அஜய் ரத்னம் நடித்திருந்தனர்.

குஞ்சுமோன் மகன்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது 31 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை குஞ்சமோன் தயாரித்து வருகிறார். இந்நிலையில் குஞ்சுமோன் மகனின் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய மகன் பெயர் கோடீஸ்வரன். இவர் தன்னுடைய மகனை சினிமாவில் பிரபலமாக்க முயற்சித்தார். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த படத்தை ரீமேக் செய்தார்.

-விளம்பரம்-

குஞ்சுமோன் மகன் நடித்த படம்:

அந்த படத்தில் கோடீஸ்வரனுடன் சிம்ரன் நடித்தார். அந்த படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம், ரகுவரன், அம்பிகா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை. அந்த படத்தினுடைய பாடல்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அந்த பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தன்னுடைய தந்தையைப் போல் கோடீஸ்வரனும் பிரபலமாவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரால் வெற்றியடைய முடியவில்லை.

Advertisement