விந்தியா குறித்து அவதூறு, ஆஜரான மகளீர் ஆணையம் – சிக்கலில் சிக்கிய தி.மு.க பிரபலம்.

0
1654
Vindhya
- Advertisement -

நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான நடிகை விந்தியா. இவர் தமிழில் ரகுமான் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மார்கழி திங்கள்’ பாடல் தான் அப்போதய 90ஸ் இளசுகளின் Annual day பாடலாக இருக்கும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கும் இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை விந்தியா. சங்கமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அதன் பின் இவர் திருநெல்வேலி, மகளிர்காக, கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சங்கமம் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு வேறு எந்த ஒரு படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் விந்தியா.

- Advertisement -

விந்தியா குறித்த தகவல்:

மேலும், பட வாய்ப்புகள் குறையவே இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பானுப்பிரியாவின் சகோதரரான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதோடு இளம் வயதில் ஆரம்பத்தில் குடும்பபாங்கா நடித்த நடிகை விந்தியா பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியாக நடித்ததோடு ஐட்டம் பாடலுக்கு கூட நடனமாடி இருந்தார். இவர் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வட்டப் பாறை என்ற படத்தில் நடித்திருந்தார்.

விந்தியா குறித்த சர்ச்சை:

அதுமட்டுமில்லாமல் இவர் 2006 ஆம் ஆண்டில் அரசியலில் குதித்து விட்டார். மேலும், இவர் அதிமுகவில் இணைந்து திமுகவிற்கு எதிராக பல பிரச்சாரங்களையும் செய்தார். இவர் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவர்கள் நடிகை வித்யாவை குறித்து அவதூறாக பேசி யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து விந்தியாவின் சார்பில் அதிமுக சட்ட ஆலோசரும் வழக்கறிஞருமான இன்பத்துறை அவர்கள் திமுக பேச்சாளர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

குடியாத்தம் குமரன் புகார்:

அந்த புகாரில், குடியாத்தம் குமரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் குடியாத்தம் குமரன் பேசியிருந்த வீடியோவையும் புகாரியில் இணைத்திருக்கிறார். தற்போது இந்த மனுவை ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம் இது குறித்து தகவல் அறிக்கை தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் துறை ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.

திமுக பேச்சாளர் மீது குற்றச்சாட்டு:

மேலும், குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே சமீபத்தில் தான் குஷ்பு பற்றி அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது மீண்டும் திமுக பேச்சாளர் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிக்கி இருப்பது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Advertisement