28 Years of Asuran : இன்றோடு 28 ஆண்டுக்கு முன்பே இப்படி ஒரு ஹாலிவுட் ரீமேக், விக்ரம் படத்தால் ட்ரெண்டான பாடல் – ஹாரிஸ் செய்த மேஜிக்.

0
2181
Asuran
- Advertisement -

பிரிடேட்டர் படத்தை மையமாக வைத்து உருவான அசுரன் திரைப்படம் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு படங்களை ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று தான். தமிழ் மொழியில் இருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் படங்கள் ரீமேக் செய்வதும் அங்கிருந்து தமிழுக்கு ரீமிக்ஸ் செய்வதும் வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை இந்த வழக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படங்களையும் தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படங்களில் ஒன்று தான் அசுரன். இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அசுரன். இந்த படத்திற்கு ஆர்கே செல்வமணி திரைக்கதை எழுதியிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி, நெப்போலியன், செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அர்னால்டு நடித்த 1987 ஆம் ஆண்டு வெளியிட்ட பிரிடேட்டர் திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த அசுரன் திரைப்படம்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த படத்தின் கதையை அப்படியே அடிப்படையாகக் கொண்டு அசுரன் படத்தை உருவாக்கி இருந்தார்கள்.

ஹாலிவுட் படத்தில் ஏலியன் பூமிக்குள் வந்து மனிதர்களை வேட்டையாடும். பின் ஹீரோ காப்பாற்றுவார். அதே தமிழில் அருண் பாண்டியன் ஹீரோவாக இருக்கிறார். அவர் அசுரனாக வரும் ஏலியனை வேட்டையாடுகிறார். கொஞ்சம் தமிழ் படத்துக்கு ஏற்ப கதாநாயகி, மிரட்டல் ஆன வில்லன் மன்சூர் அலிகானை வைத்து பாடல்கள் எல்லாம் கொடுத்து கலவையான மசாலா ஆக இயக்குனர் உருவாக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் ஹிட் ஆகவில்லை. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமான கதைகளத்தில் இந்த படத்தை உருவாக்கி இருந்தார்கள். இருந்தாலும், இந்த படம் வெற்றி பெறவில்லை. அது மட்டும் இல்லாமல் லாஜிக் மீதி எல்லாம் இருக்கிறது என்று விமர்சித்திருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடல் இந்த படத்தில் வந்ததுதான்.

விக்ரம் படத்திற்கு வந்த பிறகுதான் பலருமே அசுரன் படமே நினைவுகள் வந்தது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் தற்போது பிரபலமாக இருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். விக்ரம் படத்திற்கு பிறகு தான் இந்த பாடலை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். மேலும், அசுரன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இதை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள்.

Advertisement