சிம்பிளாக முடிந்த கும்கி பட நடிகரின் திருமணம். புகைப்படங்கள் இதோ.

0
897
aswin

தமிழில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கும்கி படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். இதுவே இவருடைய முதல் படம். இந்த படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அஸ்வின் ராஜா அவர்கள் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் போன்ற பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஸ்வினுக்கு கூடிய விரைவில் காதல் திருமணம் நடைபெற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.

- Advertisement -

நடிகர் அஸ்வின் அவர்கள் சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயை காதலித்து வந்தார். வித்யாஸ்ரீ அமெரிக்காவில் எம்எஸ் பட்டம் படித்து முடித்தவர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். பின் இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நடிகர் அஸ்வின் –வித்யாஸ்ரீ இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கொரோனா நோய்ப் பரவல் மிகத் தீவிரமாக இருந்து வரும் இந்த வேளையில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. மண நிகழ்ச்சிகள் உட்பட பலவற்றுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளதால் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதோ அவர்களின் திருமண புகைப்படங்கள் .

-விளம்பரம்-
Advertisement