IPL டிக்கெட் இலவசம்? குரேஷி வீடியோவை நம்பி ஏமார்ந்த ரசிகர்கள் – குரேஷி கொடுத்த விளக்கம் இதோ.

0
538
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பாக குக் வித் கோமாளி பிரபலம் குரேஷி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் குரேஷி. இவர் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில் தான். பின் இவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார்.

-விளம்பரம்-

பல கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர்களுள் குரேஷியும் ஒருவர். பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமையை பயன்படுத்தி இவர் விஜய் டிவிக்குள் நுழைந்தார். மேலும், இவர் தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதோடு இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

- Advertisement -

சின்னத்திரையில் குரேஷி:

அதனை தொடர்ந்து இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார். பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து இருந்தார். அப்படியே இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பங்கு பெற்று வருகிறார். அதிலும் இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார்.

குரேஷி வீடியோ:

இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் கவுண்டர்கள், காமெடிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் குரேஷி வீடியோ தான் சர்ச்சையாகி இருக்கிறது. அந்த வீடியோவில் குரேஷி, ஐபிஎல் டிக்கெட் நம்ம சேனலில் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறோம். சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மொத்தம் 40 பேருக்கு டிக்கெட் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறோம்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கேள்வி:

அதுக்கு நீங்க, மெட்ராஸ் வ்லாக் இன்ஸ்டாகிராம் பேஜை ஃபாலோ, லைக் பண்ணிட்டு அதை நம்ம இன்ஸ்டாகிராம் ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்க. அப்படி பண்ணுற ஐடியில் இருந்து மொத்தம் 40 பேருக்கு ப்ரீயா ஐபிஎல் டிக்கெட் கொடுக்கப் போறோம். நம்ம சேனலை ஃபாலோ பண்ணாதவங்க பண்ணிடுங்க என்று பேசி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் மட்டும் தான் கிடைக்கும். ஆன்லைனில் அறிவித்ததில் இருந்தே டிக்கெட் வாங்குவதற்கு பலருமே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி ஃப்ரீ டிக்கெட்? குரேஷி? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

குரேஷி கொடுத்த விளக்கம்:

இதை அடுத்து இது தொடர்பாக குரேஷி, போன ஐபிஎல் சமயத்தில் என்னுடைய youtube சேனலில் ஒரு கான்டெஸ்ட் வைத்திருந்தேன். என் youtube சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி ஸ்க்ரீன்ஷாட் அனுப்ப சொல்லி இருந்தோம். அப்படி அனுப்பினவங்களில் இருந்து கான்டெஸ்ட்டில் வெற்றி பெற்றவர்களை youtube சேனலில் அறிவித்து அவர்களுக்கு சொல்லியிருந்த மாதிரி ஃப்ரீ டிக்கெட் கொடுத்தோம். இது எப்பவோ பேசுனதை இப்ப பேசின மாதிரி ஷேர் செய்து வருகிறார்கள். எப்பவோ காணாம போன குழந்தை கண்டுபிடித்த பிறகும் குழந்தையை காணோம்னு செய்தியை பரப்பிக் கொண்டே தான் இருக்காங்க. அப்படிதான் என் வீடியோவும் இப்படி பயன்படுத்துகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement