பெரும் கேலிக்கு உள்ளான ‘குருவி’ படத்தின் இடைவெளி காட்சி – சுதப்பிய காரணம் சொன்ன ஸ்டண்ட் மாஸ்டர்.

0
158
- Advertisement -

விஜயின் குருவி படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று தான் குருவி.

-விளம்பரம்-

இந்த படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகிருந்தது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் மூலம் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரிப்பாளராக தமிழ் சினிமா உலகில் களமிறங்கியிருந்தார். மேலும், இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். கில்லி படத்துக்கு பிறகு தான் இந்த படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குருவி படத்தில் விஜயுடன் திரிஷா, சரண்யா, மணிவண்ணன், சுமன், பவன், நிவேதா தாமஸ், விவேக், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

குருவி படம்:

இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைகளத்தை கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இருந்தாலும், இந்த படத்தில் சில காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் இருந்தது என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்திருந்தார்கள். குறிப்பாக, படத்தில் விஜய் உடைய அறிமுகக் காட்சியில் அவர் குடிநீர் தொட்டியில் இருந்து வெளியே வருவார். வெளியில் வரும்போது அவர் கொஞ்சம் கூட நனைந்து இருக்கவே மாட்டார்.

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் பேட்டி:

அதேபோல படத்தினுடைய இடைவெளி காட்சிக்கு முன்பு பில்டிங் ஒன்றின் மீது இருந்து விஜய் மின்சார ரயிலுக்குள் தாவி செல்வார். விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே இந்த காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், குருவி படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருந்த ராக்கி ராஜேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், படத்தில் நாங்கள் எடுக்க நினைத்தது ஒன்று, வந்தது ஒன்று. முதலில் ரயில்வே ஸ்டேஷன், அந்த பில்டிங் இடையே கேமரா ஆங்கில் எல்லாம் எடுத்து விட்டோம்.

-விளம்பரம்-

ஸ்டண்ட் காட்சி குறித்து சொன்னது:

அதற்கு பிறகு ஸ்டுடியோவில் செட் போட்டோம். அதில் கிரீன் மேட் போட்டு விஜய் சார் குதிக்கிற மாதிரி காட்சிகள் எல்லாம் எடுத்தோம். ஆனால், சிஜி தொழில்நுட்பத்தில் அந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் நீளமாக்கி விட்டார்கள். நாங்கள் பில்டிங்க்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே 10 அடி தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் லாஜிக் இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சொன்னேன். இயக்குனரும் சரி என்று அதை தான் செய்ய சொன்னார்.

கிண்டல் செய்யப்பட்ட காரணம்:

சிஜி துறையில் செய்தவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. அந்த காட்சிகள் சரியாகவே இணைக்கவில்லை. அதை அப்படியே ஒரிஜினலாக படத்திலும் வைத்து விட்டார்கள். அதற்குப்பின் இயக்குனர், சரி விடுங்க மாஸ்டர் படத்தில் இது ஒன்று தான் மைனஸ் ஆக இருக்கும் என்று கூறியிருந்தார். தற்போது விஜய் அவர்கள் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடிக்கிறார்.

Advertisement