வெளிநாட்டில் நயனுடன் எடுத்த புகைப்படத்தை வீட்டில் பிரேம் போட்டு வைத்துள்ள விக்கி. எந்த புகைப்படம்னு பாருங்க.

0
59025
vignesh
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘போடா போடி’. இதில் ஹீரோவாக ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது தான் விக்னேஷ் சிவன் இயக்குநராக தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் படமாம். இதனைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தினை வேல்ராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தினை இயக்கினார் விக்னேஷ் சிவன். இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

- Advertisement -

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் இருந்து துவங்கியது விக்னேஷ் சிவனின் திரையுலக வெற்றி பயணம் மட்டும் அல்ல, கூடவே அவருடைய வாழ்க்கை துணையுடனான பயணமும் தான்.

Nayanthara and Vignesh Shivan's beguiling love story - Revisiting ...

ஆம்.. இந்த படத்தில் இருந்தே இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலிக்க தொடங்கி விட்டனர். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் சாக்லேட் பிரவுனி ஒரு கப்பில் இருந்தது. அங்கு அருகில் ஒரு போட்டோ ஃபிரேமில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இருந்தது. அப்புகைப்படத்தில் அவர்கள் அணிந்திருக்கும் டிஷர்டில் அவர்களது பெயரின் முதல் எழுத்து அச்சடிக்கப்பட்டிருந்தது. அவ்வீடியோவுடன் “இரவு நேரத்தில், வீட்டில் சாக்லேட் பிரவுனி செய்தோம்” என்று ஒரு ஸ்டேட்டஸும் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

Advertisement