குத்து பட நடிகை ரம்யாவிற்கு புற்று நோய் ..! காலில் அறுவை சிகிச்சை..!

0
306
Kuthuramya

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன் பின்னர் தனுஷுடன் பொல்லாதவன் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Ramyaspandana

இவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும். அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம் செய்கிறார்.

இந்நிலையில் நடிகை ரம்யாவிற்கு கடந்த சில நாட்களாக கால் விரலில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது அவருக்கு காலில் புற்று நோய் அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். தற்போது நலமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகை ரம்யா.