தன்னை ஆபாசமாக மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த “லட்சுமி” !

0
5231
lakshmi

சமீபத்தில் யூடியூபில் வெளிவந்து செம்மயாக வைரலான குறும்படம் ‘லக்ஷ்மி’. 15 நிமிட படமாக இருந்தாலும், இந்த படத்தின் கருவை சரியாக சொல்லியிருந்தது படம். எப்போதும் இயந்திரத்தைப் போல் வாழும் ஒரு வாழக்கையில் சந்தர்ப்பத்தினால் வழிமாறி கணவனல்லாத வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துகொள்வதே கதை.
lakshmiஇந்த படம் வைரலாகி தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான வியூக்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த படத்தில் வேறு ஒரு ஆணுடன் செல்லும் பெண்ணாக நடித்திருப்பவர் தான் லட்சுமி ப்ரியா. இவர் இதற்கு முன் மாயா, கள்ளப்படம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் குறும் படத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் வரும் மீம்சுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது அவர் கூறியதாவது,
lakshmiநாங்கள் கொடுக்கும் படைப்புகள் பற்றிய தவறை சரி செய்ய தயாராக உள்ளோம், ஆனால், அதனை ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் கூறுபவர்களின் கருத்துக்களை நாங்கள் காதில் கூட போட்டுக்கொள்வதில்லை என பதிலடி கொடுத்தார் லட்சுமி ப்ரியா.