திடீரென சீரியலில் இருந்து மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலும் ஒன்று. இந்தத் தொடரில் நான்கு சகோதரிகளை மையமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் சந்தானம் என்கிற நபர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகின்றார்கள்.
மேலும், நர்மதாவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி சூழ்நிலை காரணத்தினால் இவர்கள் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு சென்று விடுகிறார்கள். காவிரி அசிங்கப்படுத்தியதால் பசுபதி மொத்த குடும்பத்தையும் பழிவாங்க நினைக்கிறார். பின் சென்னையில் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றார்கள். அந்த வீட்டில் உரிமையாளர் பெயர் விஜய். பின் தாங்கள் கொண்டு வந்த மொத்த பணத்தையும் குமரன் தொலைத்து விடுகிறார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள்.
மகாநதி சீரியல்:
நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்று காவேரி விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டிற்கு செல்கிறாள். காவிரிக்கு திருமணம் நடந்தது தெரிந்து கொண்ட நிவின் மனம் உடைந்து போகிறான். பின் ஒரு கட்டத்தில் விஜய் – காவிரி திருமணம் காண்ட்ராக்ட் என்பது தாத்தாவிற்கு தெரிய வருகிறது. இதை தெரிந்தும் தெரியாமல் போல் தாத்தா அமைதியாக நிற்கிறார். தற்போது சீரியலில் சொத்து முழுவதையும் காவேரி-விஜய் பெயரில் அவருடைய தாத்தா எழுதி வைக்கிறார். இதை வீட்டில் உள்ள யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.
லட்சுமி ப்ரியா குறித்த தகவல்:
இனி வரும் நாட்களில் காவிரியை விஜய் ஏற்றுக் கொள்வாரா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் காவிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் லட்சுமி பிரியா. இந்த சீரியலில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. இவர் இந்த சீரியலுக்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த சீரியலில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார்.
அதற்குப்பின் ட்ரிப், பன்னிக்குட்டி, சாலை, வழிப்பாட்டு முறை, பயணம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்க வில்லை என்றவுடன் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது மகாநதி சீரியலில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் லட்சுமி பிரியா சீரியலில் இருந்து விலகி இருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலை விட்டு விலகிய லட்சுமி ப்ரியா:
அதாவது, இவர் மலையாளத்திலும் Chandrakatham என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த சீரியலில் இருந்து இவர் திடீரென்று வெளியேறி இருக்கிறார். ஆனால், இவர் வெளியேறியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இவருக்கு பதிலாக மலையாள சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்த ஜான்சி தான் இந்த தொடரில் நடிக்கிறார்.