இவங்கெல்லாம் இயக்குனர் ஆவாங்கனு – சமுத்திரக்கனியின் பேச்சால் மேடையில் கதறி அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்

0
1553
Samuthirakani
- Advertisement -

சமுத்திரக்கனி பேச்சை கேட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்ணீர் விட்டு கதறி அழுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை. இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும்.

-விளம்பரம்-

மேலும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் திரைப்பயணம்:

ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். அவ்வப்போது அவர் போடும் பதிவுகளை சர்ச்சையாகவும் மறுவதுண்டு. அதற்கு அவர் தகுந்த பதிலடியும் கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி.

ஆர் யூ ஒகே பேபி படம்:

இந்த படத்தில் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். படத்தில் இவருடன் அபிராமி, மிஸ்கின், முருகா, அசோக், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தை பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த படம் தற்போது உள்ள சமுதாயத்திற்க்கு சொல்ல வேண்டிய ஒரு கதையாகும்.

-விளம்பரம்-

சமுத்திரக்கனி அளித்த பேட்டி:

இப்படம் குழந்தையை வேண்டிய அமைந்துள்ளதால் அப்படத்தின் தலைப்பும் அப்படியே பொருத்தமாக இருக்க “ஆர் யூ ஒகே பேபி” என்று வைத்ததற்கு காரணம். இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறது. அதனை இளையராஜா எழுதியுள்ளார். இந்த படத்தை நான் நடத்திய நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் சமுத்திரக்கனி லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து கூறி இருந்தது, நிறைய முறை படம் தொடர்பாக லட்சுமி மேடம் என்னிடம் பேச கேட்டிருந்தார்கள். என்னால் அவர்களை சந்தித்து பேச முடியவில்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன் அழுத வீடியோ:

தற்போது இந்த படத்தில் தான் பண்ண இருக்கிறது. நாடோடிகள் படத்தில் அவர்கள் சசிகுமாரின் அம்மாவாக நடித்திருந்தார். அவர் எப்போதுமே ஒரு மானிட்டர் பின்னாடி இருந்து எதையாவது ஒன்று சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு அவரை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. இவர் ஒரு அற்புதமான இயக்குனர். அவர்களுக்கு என்ன தேவையோ அதை நம்மிடம் இருந்து எப்படியாவது வாங்கி விடுவார். சிறந்த இயக்குனர் என்று பாராட்டி பேசிருந்தார். இதை சமுத்திரகனி பேசிக்கொண்டிருக்கும் போது லட்சுமி ராமகிருஷ்ணன் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். இதை பார்த்த சமுத்திரக்கனி அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இருந்தாலும், லட்சுமி தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறார்.

Advertisement