‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ – ஜெய் பீம் படத்தை விமர்சனம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
488
jaibhim
- Advertisement -

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து. ஆனால், எந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ அதே அளவு சர்ச்சைகளில் சிக்கியது. இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக பல வன்னிய அமைப்புகள் இந்த படத்தை எதிர்தனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் காலண்டர் ஒன்றில் இடம்பெற்ற அக்னி கலச புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அந்த படம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் பல வன்னிய சமூகத்தினரை புண்படுத்திவிட்டதாக பல வன்னிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படம் குறித்து விமர்சித்து இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெய்பீம் படத்தின் உண்மை கதை நேர்மையாக இயக்கியிருந்தால் அந்த படம் சிறந்த உத்வேகமளிக்கக் கூடிய படமாக இருந்திருக்கும். ஆனால் உண்மைக் கதைக்கு புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது.உண்மையாக கடலூரில் ராஜக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.

இதையும் பாருங்க : எஸ் ஜே சூர்யாவிற்கு முன் முதலில் கமிட் ஆனது இந்த நடிகர் தானாம் (சிம்பு கூட ஏற்கனவே நடிச்சவர் தான் )

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம். ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவிற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்தது.

அதில் ரசிகர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தை பார்த்துவிட்டு, இந்த படத்தில் எந்த ஒரு ஜாதி, மத தொடர்பும் உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது உங்கள் மனதை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன் இப்படி இரட்டை மன நிலையை கொண்டு இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ படம் என் மனதை தொட்டது. இந்த படம் உண்மை சம்பவம் என்று தான் நம்பினேன்.

-விளம்பரம்-

ஆனால், சில சர்ச்சைகள் எழுந்த பின்னர் தான் நான் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். உண்மை சம்பவத்தில் ஒரு மனிதனுக்கு ஆதரவாக மற்றொரு மனிதன் நின்று இருக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் கதைக்கு தேவைப்படும் வகையில் இயக்குனர் பயன்படுத்திகொண்டு இருக்கிறார். தவறான விளக்கத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

Advertisement