உன்ன காப்பாத்திக்க முடியல, நீ கடவுளா ? – அன்னபூரணி குறித்து முதல் வீடியோவை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
718
lakshmi
- Advertisement -

கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது திடீர் சாமியார் அண்ணபூரணி அரசு சாமியார் தான். பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.

-விளம்பரம்-

போலி சாமியார் அன்னபூரணி :

அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும் பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அந்த வீடியோக்களும் இதனுடன் இணைத்து வெளியிட்டு உள்ளார்கள்.

- Advertisement -

அன்னபூரணி குறித்து லட்சுமி ராம்கி :

அதில் அன்னபூரணி திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது. ஆனால், தற்போது அன்னபூரணி திடீர் சாமியாராகி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

வச்சி செய்து வரும் நெட்டிசன்கள் :

அதில் அவர் கூறியிருப்பது, அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன் ஒரே சிரிப்பா இருக்கு என்று கூறி இருந்தார். அதே போல அண்ணப்புறணி வரும் 1 ஆம் தேதி ஒரு பக்தி கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என்று போலீசார் மறுக்க அந்த நிகழ்ச்சி தற்போது கேன்சல் ஆகிவிட்டது. கடந்த சில தினங்களாகவே அன்னப்பூரணியை சமூக வலைதளத்தில் பலரும் வச்சி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் வெளிநாட்டில் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், அன்னபூரணி விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவர் நடத்தை குறித்தோ எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், இதுபோன்ற போலி சாமி என்று சொல்லிக்கொண்டு காலில் விழுவது தவறான விஷயம், முட்டாள்தனம்.

This image has an empty alt attribute; its file name is 1-228.jpg

ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? :

இந்த மாதிரி போலி சாமியார்களை சாமி என்று சொல்லி மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எத்தனை நாட்கள் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? அது வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் இந்தப் பெண் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கி நான் அனுப்பி வைத்தேன்.

அவர் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையே தீர்க்க முடியல:

ஆனாலும், அவர் இவனோடு தான் வாழ்வேன் என்று கூறியிருந்தார். இப்படி தன்னை அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்வதை கேட்டு மக்கள் அவர் காலில் விழுவதே தவறானது. அனைத்திற்கும் மேலாக அவர் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையே தீர்க்க முடியாதவங்க மத்தவங்க பிரச்சனையை தீர்க்க போறாரா என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement