இதை நிறுத்தவில்லை என்றால்,நானும் ஹிஜாப் போட்டு வெளியே வருவேன்- முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுத்த நடிகை லட்சுமி ராமக்கிருஷ்ணன். வைரலாகும் வீடியோ.

0
332
lakshmi
- Advertisement -

கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். சில மாணவிகள் காவி துப்பட்டா அணிந்து வந்தனர்.

-விளம்பரம்-

இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது. இதனால் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

- Advertisement -

இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல்:

இந்துத்துவா மாணவர்கள் முழுவதும் கரகோஷம் செய்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இந்துத்துவா 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறம் படுத்தி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் செய்து இருக்கிறார்கள். ஆனால், அந்த பெண் யாரையும் பார்த்து பயப்படாமல் தனியாக நின்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பி எனக்கு பயம் இல்லை என்பதை சத்தமாக சொல்லி இருக்கிறார்.

இந்தியா முழுவதும் ஒலிக்கும் ஹிஜாப் விவகாரம்:

இப்படி சில தினங்களாக நடந்து வரும் இந்தப் பிரச்சனை இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதரீதியாக கல்லூரி மாணவர்கள் இப்படி மோதிக்கொள்ளும் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, கர்நாடகாவில் நடந்துகொண்டிருக்கும் ஹிஜாப் பிரச்சினை நினைத்து ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதிலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்து நிறைய ஆண்கள் கரகோஷம் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஹிஜாப் விவகாரம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது:

இப்படி எல்லாம் பெண்களை தாக்குவதற்கு என்ன உரிமை இருக்கு உங்களுக்கு? இந்த சுதந்திர நாட்டில் அவர்களுடைய வழியில் அவர்கள் விரும்பும் ஆடையை அணிந்து கொள்ள உரிமை உண்டு. இதை யாரும் தடை செய்ய முடியாது. நான் ஒரு முஸ்லீம் நாட்டில் 22 வருடம் இருந்திருக்கிறேன். அதை வைத்து தான் சொல்கிறேன். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட்டு இருப்பதை அவர்கள் பாதுகாப்பாக கருதுவார்கள். அப்படி காலம் காலமாக ஹிஜாப் போட்டு அணிந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவை நீக்க சொன்னால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் விருப்பப்படி ஆடை அணிவதை ஏன் நீக்க வேண்டும்? எதற்கு இந்த போராட்டம் செய்கிறார்கள்? அதுவும் சில வேண்டாத விசக்கிருமிகள் தான் இளைஞர்கள் மீது இந்த வன்மத்தை திணித்து செய்யத் தூண்டுகிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு காரணம்:

இது மிகவும் தவறான ஒன்று. ஒரு சில சமயத்தில் நாமே ஹிஜாப் போட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். தேவையில்லாத கமெண்டுகள் வாங்க வேண்டாம், முழுவதையும் கவர் பண்ணி செல்லலாம் என்றெல்லாம் யோசித்து இருக்கிறோம். முஸ்லீம் பெண்கள் அவர்கள் கலாச்சாரத்தை பின்பற்றி வந்தவர்கள். திடீரென்று அதை செய்யக்கூடாது என்று சொன்னால் எப்படி அவர்களால் முடியும். இது அவர்களுடைய கலாச்சாரம். இதை மதரீதியாக கொண்டு செல்ல வேண்டாம். சிலர் பூணுல் பற்றி பேசுகிறார்கள். இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. தேவையில்லாமல் இந்தியாபோன்ற சுதந்திர நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம். ஒரு சிட்டிசனாக நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

முஸ்லீம் பெண்களுக்காக போராடும் லட்சுமி:

இதற்கு பின்னாடி யார் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்த தருணத்தில் பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கூடாது என்று சொல்வதற்கு அந்த இளைஞர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதை அந்த இளைஞர்களின் வீட்டிலுள்ள தங்கை, தாய் இடம் நீங்கள் இதை செய்யக்கூடாது என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இப்படித்தான் அவர்கள் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான செயல். இனிமேலும் அவர்கள் ஆடை குறித்து பிரச்சாரம், போராட்டம் செய்தார்கள் என்றால், நாங்களும் ஹிஜாப் போட்டு வெளியே வருவோம். முஸ்லிம் சகோதரிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement