கோலாகளமாக நடந்த லட்சுமி ஸ்டோர்ஸ் நக்‌ஷத்ராவின் நிச்சயதார்த்தம் – புகைப்படங்கள் இதோ.

0
824
nak

இந்த கொரோனா சமயத்திலும் பல்வேறு நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ் திருமண நிச்சயதார்தத்தை முடித்துள்ளார். சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் மிகவும் எளிதாக இடம்பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினியாக ஆரம்பத்தில் அறிமுகமாகி பின்னர் பஞ்சுமிட்டாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத் தரசிகள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை நக்சத்ரா நாகேஷ்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதே போல மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக சன் டிவி எதாவது ஒரு சீரியலை ஆரம்பித்துவிடுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை போல சன் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் லட்சுமி ஸ்டோர்ஸ்.

- Advertisement -

இந்த சீரியலில் பஞ்சுமிட்டாய் என்ற செல்லப்பெயரோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நக்சத்ரா. 28 வயதாகும் நக்‌ஷத்ரா நாகேஷ் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறாராம். சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்து இருந்தார்.தனது வருங்கால கணவர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த நக்ஷத்ரா பள்ளியில் படிக்கும்போதே நானும் அவரும் ஒரே தியேட்டர் குழுவில் தான் இருந்தோம்.அப்படி தான் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அது எப்போது காதலாக மாறியது என்று தெரியாது. அவரும் மீடியா சம்மந்தப்பட்ட துறையில் தான் இருக்கிறார்.

தியேட்டர்காரன் என்று குழுவில் அவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டதற்கு, நாங்கள் எதையும் முடிவு செய்ய மாட்டோம் எல்லாம் அதுவாக அமையும் வரை காத்திருப்போம். அந்த போட்டோஷூட் கூட நியூ இயர் அப்போ எடுத்து தான். இருப்பினும் கூடிய விரைவில் எங்கள் திருமணத்தை பற்றி அறிவிக்கிறோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நக்‌ஷத்ரா நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ.

-விளம்பரம்-
Advertisement