தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. இறுதியாக இவர் நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கௌரவ புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை :
படத்தில் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அவரது மகனாக விக்ராந்த், சம்சுதீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் இந்த படத்தில் திரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவருமே சிறுவயதில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலுக்கும் சிறுவயதில் இருந்தேன் பகை இருந்து வருகிறது அது கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் சரி ஊரில் இருந்தாலும் சரி.
மேலும் விஷ்ணு விஷாலின் கிராமத்தில் இந்துக்களும் விக்ராந்த் கிராமத்தில் முஸ்லிம்களும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி ஆரம்பித்த த்ரீ ஸ்டார் கிரிக்கெட் குழுவில் விக்ராந்த்தும் விஷ்ணு விஷாலும் இணைந்து விளையாடுகிறார்கள் ஆனால் விஷ்ணு விஷால் மீது இருக்கும் வன்மத்தால் அவரை அந்த அணியில் இருந்து நீக்கிறார்கள் இதனால் இந்துக்கள் ஒரு டீம் ஆகவும் முஸ்லிம்கள் நிறைந்த ஆட்கள் ஒரு டீமாகவும் கிரிக்கெட் அணியை உருவாக்குகிறார்கள்.
இப்படி இரண்டு ஊர்கள் இரு வேறு மதத்தினர் அடங்கிய கிரிக்கெட் அணிகள். அரசியல் ஆதாயத்திற்காக இவர்களுக்கு சண்டை மூட்டி ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மொய்தீன் பாய் எப்படி உள்ளே புகுந்து பஞ்சாயத்து செய்து இரு ஊர்களையும் ஒன்றிணைக்கிறார் என்பதே படத்தின் கதை
நிறை :
படத்தின் நடிகர்கள் தேர்வு முக அருமை. குறிப்பாக கிரிக்கெட் விளையாட தெரிந்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் தங்கள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றனர்.
ரஜினி என்ட்ரிக்கு பின்னர் வரும் சின்ன சின்ன ஆக்ஷன், மற்றும் குறும்புகள் ரசிக்க வைக்கிறது.
தேவாவின் குரலில் ‘அன்பாலனே’ பாடல் ரசிக்க வைக்கிறது.
இஸ்லாமியர்களுக்கும் இந்துகளுக்கும் இடையில் இருக்கும் உறவு எப்படி சதி வேலைகளால் பிளவுபடுகிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா இந்தியர்களுக்கானது, நான் ஒரு இந்திய முஸ்லிம். நான் இங்கு பிறந்தேன் இங்கேயே இறப்பேன் போன்ற வசனங்கள் அருமை.
கலை இயக்குனர் ராமு தங்கராஜ் கைவண்ணம் படத்தை லைவ்லியாக காண்பித்து இருக்கிறது.
இசை புயலில் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்து இருக்கிறது.
குறை :
படத்தில் ரஜினியை மட்டும் எதிர்பார்த்து சொல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
படத்தின் நீளம் உங்கள் பொறுமையை சோதித்து விடும்.
படத்தின் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் அதன் நீளம் நம்மை சலிப்படைய வைக்கிறது.
குறிப்பாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் டைனிங் டேபளில் பேசிக்கொண்டு இருக்கும் கட்சி அருமையாக இருந்தாலும் அந்த காட்சியின் நீளம் அந்த காட்சி எப்படா முடியும் என்ற சலிப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் கருத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு சுவாரசியமான திரைக்கதையை அமைக்க தவறியுள்ளார் ஐஸ்வர்யா.
செந்தில், தம்பி ராமய்யா நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் போன்றோர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இறுதி அலசல் :
மொத்தத்தில் லால் சலாம் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்து இருக்கலாம்