தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து விளங்கியவர் மணிவண்ணன். கோயமுத்தூர் சூலூர் வட்டத்தில் ஒரு துணி வியாபாரியின் மகனாக பிறந்தவர் தான் மணிவண்ணன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தமிழ் உணர்வாளர், கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் முதலில் 1978 ஆன் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்தார். அதன் பின் இவர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற ஒரு படத்தின் மூலம் தான் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து ஜோதி, இங்கேயும் ஒரு கங்கை,நூறாவது நாள், முதல் வசந்தம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். மேலும், இவர் கடைசியாக 2013ஆம் ஆண்டு நாகராஜா சோழன் எம்.எ எம்.எல்.எ என்ற படத்தினை இயக்கினார். இந்த படம் அமைதிப்படை படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை சினிமா உலகில் 50 படங்களை இயக்கி உள்ளார்.
அதில் 35 படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட். 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மணிவண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவருடைய இறப்பை திரையுலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மணிவண்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், கடந்த 2013 ஆம் ஆண்டு அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. ரகுவண்ணனுக்கு 2016 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற முதல் குழந்தை பிறந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆதித்யன் என்ற இரண்டாம் ஆண் குழந்தை பிறந்தது. சமீபகாலமாக நடிகர் மணிவண்ணனின் மகன் குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. தற்போது இவர் புகைப்படம் வெளியான உடன் அனைவரும் இவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார்கள்.
தற்போது நடிகர் ரகுவண்ணன் அவர்கள் லண்டனில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் என்ற படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். பின் 2002 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார். தற்போது ரகுவண்ணன் தனது அப்பாவின் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள் படத்தினை மீண்டும் இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.