திடீரென காலமான பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் – இன்று முதல் அவருக்கு பதில் இந்த நடிகர் தான்.

0
4032
venkatesh
- Advertisement -

கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் காலமான சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.இந்த சீரியலில் கண்ணம்மாவாக ரோஷிணியும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வந்தனர். மேலும், இந்த சீரியலில் பாரதியின் தந்தையாக நடிகர் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் வெங்கட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாறப்படைப்பு ஏற்பட்டு காலமாகி இருந்தார்.

இதையும் பாருங்க : ஜகமே தந்திரம் படத்தை ஜிகிர்தண்டா படத்துடன் ஒப்பிட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள். அட, சரியா தான் இருக்கு

- Advertisement -

நடிகர் வெங்கட், செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் குறிப்பாக பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மைனா படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது.

செல்லமடி நீ எனக்கு சீரியலை தொடர்ந்து உறவுகள், சங்கமம், சரவணன் மீனாட்சி, ஈரமான ரோஜாவே போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நடித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இவருக்கு பதில் புதிய நடிகர் ஒருவர் கமிட் ஆகியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரே தான் ஈரமான ரோஜாவே தொடரிலும் வெங்கடேஷுக்கு பதில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement