Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.05.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.

எழுதியவர்Rajkumar1 மே, 2024 அன்று 08:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிறு வயதிலேயே சினிமாவில் பல சாதனைகள் செய்த நடிகை சோபாவின்நினைவு நாள் இன்று. அவரை பற்றி பலரும் அறிந்த பக்கத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஷோபா. இவர் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் லட்சுமி மகாலட்சுமி. இவர் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் அச்சாணி, நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு ஒரு உலகம் போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் மூலம் சோபாவுக்கு திரை உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருந்தது.

சோபா நடித்த படங்கள்:

அதிலும் இவர் நடித்த அழியாத கோலங்கள், மூடுபனி உள்ளிட்ட படங்கள் எல்லாம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. மேலும், இவருடைய நடிப்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். இதனாலே இவரை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து பாவித்திருந்தார்கள். இயக்குனர் துரை இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான பசி படத்திற்காக இவர் தேசிய விருதையும் வாங்கி இருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. அதிலும் சோபாவின் முக பாவனைகள் அந்தப் பாடலுக்கு கூடுதல் அழகே தரும் என்று சொல்லலாம்.

16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.

சோபா திருமணம்:

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பிரகாசமாக செல்லும் எரி நட்சத்திரம் என்று சோபாவை பலரும் குறிப்பிடுவார்கள். தன்னுடைய 17 வருட உலக வாழ்க்கையில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல சாதனைகளை சோபா செய்து இருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா அவர்கள் சோபாவின் ஒவ்வொரு அசைவையும், அழகான நடிப்பையும் அழகாக காண்பித்திருந்தார். இவர்கள் இருவருடைய உறவு திருமணம் வரை நீண்டது.

16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.

சோபா மரணம்:

தமிழ் திரை உலகமே வியந்து பார்த்த நடிகை சோபா. இன்னும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், 1980 ஆம் ஆண்டு திடீரென்று சோபா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 18 வயது தான். இவருடைய தற்கொலை தான் புரியாத புதிராகவே இருக்கிறது. இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியிலும் திரை உலகின் மத்தியிலும் பேரிழப்பாக இருந்தது. குறைந்த வயதில் யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளை சோபா செய்திருக்கிறார்.

16 வயதில் திருமணம், 17 வயதில் தேசிய விருது, 18 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட ஷோபாவின் நினைவு நாள்.

சோபா செய்த சாதனை:

மேலும், சோபாவின் நேசத்தையும் பிரிவையும் தாங்க முடியாமல் தான் தனது மூன்றாம் பிறை படத்தில் பாலு மகேந்திரா குறிப்பிட்டு இருக்கிறார். 18 வயதிலேயே 17 படங்கள் நடித்து சாதனை செய்திருந்தவர் ஷோபா. மேலும், 1983 ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் கே ஜி ஆர் இயக்கத்தில் வெளியான லேகாயுதே மரணம் ஒரு பிளாஷ்பேக் படம். அது நடிகை சோபாவின் வாழ்க்கையும், அவருடைய தற்கொலை மரணத்தையும் தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது, மாநில விருது, ஊர்வசி விருது என தன்னுடைய 18 வயதிலேயே தென்னிந்திய சினிமா உலகை கலக்கிய நடிகை சோபாவை யாராலும் மறக்க முடியாது.

தலைப்புகள்
#ஷோபா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement