மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யனின் பிறந்தநாளில் அவரைக் குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெளிநாடுகளிலும் நிறைய இசை கச்சேரிகளில் நடத்தி இருக்கிறார்.
இவர் சினிமாவில் ஒலி வடிவமைப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப் பிறகுதான் இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த அமரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்தப் பாடல் வெளிவந்த போது சோசியல் மீடியாவினுடைய பயன்பாடு எல்லாம் அதிகம் இல்லை. இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் மிக பெரிய அளவிற்கு பிரபலமானது. குறிப்பாக, வெத்தல போடு சோக்குல, சந்திரரே சூரியரே போன்ற பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட்.
ஆதித்தியன் திரைப்பயணம்:
சொல்லப்போனால், அனைத்து இசைக் கச்சேரிகளிலும் இவருடைய இந்த பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆனால், இந்தப் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அமரன் படம் பூர்த்தி செய்ய தவறியது என்று சொல்லலாம். ஒருவேளை இந்த படமும் வெற்றி அடைந்திருந்தால் ஆதித்தினுடைய இசை வாழ்க்கையை வேற லெவலில் சென்றிருக்கும். அமரன் படத்திற்கு பிறகு இவர் நாளைய செய்தி, மின்மினி பூச்சிகள், சீவலப்பேரி பாண்டி, தொட்டில் குழந்தை, உதவும் கரங்கள், அசுரன், ரோஜா மலரே, மாமன் மகன் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
ஆதித்தியன் குறித்த தகவல்:
கடைசியாக இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தில் தான் இசையமைத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் எந்த படத்திலும்பணியாற்றவில்லை. மேலும், ஆதித்தயன் இசை வாழ்க்கையில் பெரிய வெற்றி படம் என்றால் அது சீவலப்பேரி பாண்டி தான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட். அமரன், சீவலப்பேரி பாண்டி ஆகிய படங்களில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தாலும் அதற்கு பின் வந்த ஒரு சில பாடல்கள்தான் பிரபலமானது.
ஆதித்தியன் இறப்பு:
பின் இவர் சின்னத்திரையில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியான ஆதித்யன் கிச்சன் என்ற நிகழ்ச்சி 8 ஆண்டுகளுக்கு மேல் நடந்திருந்தது. இவர் இசையைத் தாண்டி ஒரு ஓவிய கலைஞரும் ஆவார். மேலும், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அப்போது இவருக்கு 63 வயது. இவருடைய இறப்பு திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆதித்தியன் பிறந்தநாள்:
இவருடைய மறைவிற்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழிச் சேர்ந்த பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இசையமைப்பாளர் ஆதித்யன் இவ்வுலகில் இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் மக்கள் மத்தியில் ஒலிக்கப்பட்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் இன்று ஆதித்தியன் பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளில் ரசிகர்கள், அவருடைய நினைவுகளை குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அதோடு இசையமைப்பாளர் டி இமான் உடைய குருவே ஆதித்யன் தான் என்பது குறிப்பிடத்தக்கது