கோடீஸ்வர குடும்பத்தின் மருமகன் ஆகிறார் சிம்பு. நெருங்கிய நண்பர்கள் தகவல்.

0
4343
simbhu

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிம்பு. தமிழ் சினிமா உலகின் முன்னணி கதாநாயகனும், இயக்குனருமான டி.ராஜேந்தரின் மகன் தான் சிம்பு. இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர். சிம்பு தனது சிறு வயதிலேயே சினிமா துறைக்குள் நுழைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். தற்போது நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

simbhu

அதுவும் அவர் கோடீஸ்வர குடும்பத்தின் மருமகன் ஆகிறார் என்று சிம்புவுக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்தார். சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வருகிறது. அதோடு மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஜாதகம் சரியாக பொருந்தாததால் அவருடைய திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

- Advertisement -

அதிலும் சில ஜாதகங்கள் பொருந்தினால் அந்த பெண் சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இப்படி பல காரணங்களால் சிம்புவின் திருமணம் தள்ளிக்கொண்டே போனது. இது சிம்புவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் சந்தோசம் அடையும் வகையில் ஒரு நல்ல செய்தி கிடைத்து உள்ளது. தற்போது சிம்புவுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.

Simbu to enter wedlock later this year - DTNext.in

அவருக்கு லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணப்பெண் சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினர். அந்த பெண் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் இருக்குதாம். கொரோனா பிரச்சினைகள் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement