ஆதித்ய வர்மா படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் வெளியிட்ட படக்குழு.! விக்ரம் மகன் செய்ததை பாருங்க.!

0
564
Adithya-Varma

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த இந்த படத்தை பாலா இயக்க இ4 நிறுவனம் தயாரித்திருந்தது. பின்னர் சில பல காரணத்தால் இந்த படம் கைவிடபடுவதாக அறிவிக்கபட்டது.

இதை தொடர்ந்து இந்த படத்தை தற்போது வேறு ஒருவர் இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், அன்பு தாசன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

தெலுங்கு படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில் தற்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இதர வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது. ஆதித்ய வர்மா ஜூன் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement