-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

கோச்சடையான் மோசடி வழக்கு : நீதிமன்றத்திற்கு முக்காடு போட்டு சென்றது ஏன் ? லதா விளக்கம்.

0
602

கோச்சடையான் விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடமாக கோச்சடையான் விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினி நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் பாணியில் உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும்பொருட்செலவில் உருவான கோச்சடையான் படம் தோல்வியை சந்தித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தயாரித்த மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் ‘ஆட் பியூரோ’ என்ற நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் பணம் தொடர்பான விஷயம் குறித்து 2014-ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனை அடுத்து மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பெங்களூரில் உள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் புகார் அளித்து இருந்தது. இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மூலம் போடப்பட்ட உத்தரவை நீக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு:

அதோடு கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இருந்தது. பின் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என குற்றச்சாட்டுகளை ரஜனிகாந்த் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் தொடரப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கோச்சடையான் படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து லதா ரஜினிகாந்த்துக்கு விலக்கு அளித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

மீண்டும் வழக்கில் சிக்கிய லதா:

-விளம்பரம்-

மீண்டும் பண மோசடி வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் மீது புகார் எழுந்திருக்கிறது. அதாவது, பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கோச்சடையான் படத்திற்கு கடன் அளித்த ‘ஆட் பியூரோ’ நிறுவனம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கோச்சடையான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பைனான்சியிடம் பணம் வாங்கும் போது கேரன்டிக்காக கையெழுத்து போட்டு கொடுத்தேன். அது உண்மைதான். அதற்குப் பிறகு அவர்கள் அந்த பணத்தை செட்டில்மெண்ட் பண்ணினார்கள். அதோடு முடிந்து விட்டது.

-விளம்பரம்-

லதா ரஜினிகாந்த் பேட்டி:

அதற்குப் பிறகு எப்படியாவது மோசடி செய்ய வேண்டும் என்று போலி டாக்குமெண்ட்டை வைத்து என் மீது வீண் பழி போட்டு இருக்கிறார்கள். காரணம், நாங்கள் செலிபிரிட்டியாக இருப்பதால் தான். என்னிடம் அவர்கள் நேரடியாக பணத்தைக் கேட்கவில்லை. மறைமுகமாக பணம் கொடுத்து செட்டில்மெண்ட் பண்ணலாம் என்று பேசி இருந்தார்கள். என் மீது எந்த தவறும் இல்லாத போது நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும். அநியாயத்திற்கு என்னைக்கும் துணை போகமாட்டேன். நியாயத்திற்கு தான் துணை போவேன். அதற்காக நான் கோர்ட்டுக்கும் செல்ல தயார். அதே போல் இந்த வழக்கை நீதிமன்றமே, லதா ரஜினிகாந்த்க்கு சம்பந்தமில்லை என்று விளக்கி விட்டது. இருந்தாலும், தேவையில்லாமல் யாரோ கொடுத்த கடிதத்தை வைத்து என் மீதும் மீண்டும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

லதா ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை:

நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதைக்காக தான் நான் கோர்ட்டுக்கு சென்றேன். நான் முக்காடு போட்டு சென்றேன் எல்லாம் சொல்கிறார்கள். நான் முக்காடு போடவில்லை. வெயில் அதிகமாக இருந்தது என்று துப்பட்டாவை தலையில் போட்டேன். சட்டத்திற்கு மரியாதை கொடுத்து தான் நான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன். பிரபலமான சேனலும், நியூசும் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். தீர விசாரித்து பரப்புங்கள் தகவலை சொல்லுங்கள். ஒரு சாதாரண மனிதருக்கு இந்த நிலைமை வராது. பிரபலமாக இருப்பதால்தான் இந்த பிரச்சனை வருகிறது. காரணம், அவர்களுக்கு பெயர் கெட்டுப் போய்விடும் என்று பயந்து பணத்தைக் கொடுப்பார்கள் என்றெல்லாம் இந்த மாதிரி வேலைகளை செய்கிறார்கள். நாங்கள் அநியாயத்திற்கு துணை போக மாட்டோம், நானும் சாரும் நியாயத்திற்கு தான் குரல் கொடுப்போம் என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news