நாமினேஷினல் இருக்கும் தனது அக்கா, கமல் பட பாடல் வரிகளை போட்டு ஓட்டு கேட்ட மாயாவின் தங்கை.

0
193
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் மாயாவும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

- Advertisement -

இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து மற்ற போட்டியாளர்களிடமும் சண்டை, சச்சரவில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக, இவர் பூர்ணிமாவுடன் கேங் சேர்ந்து கொண்டு செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. அதனால இவரை புள்ளிகேங்க் என்று தான் அழைக்கிறார்கள். மேலும், அதிகமா அர்ச்சனா, விசித்ரா போன்றவர்களிடம் தான் மாயா சண்டைக்கு சென்றிருக்கிறார். இதனால் பலமுறை கமல் மாயாவை கண்டித்தும் இருக்கிறார்.

குறிப்பாக, பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே மாயா தான். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேட் பட்டியல்மாயாவின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. இந்த வாரம் மாயா, நிக்சன், தினேஷ், மணிகண்டன், விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பொதுவாகவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் நபர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதில்லை.

-விளம்பரம்-

காரணம், அவர்கள் கண்டன்ட் கொடுக்கிறார்கள், நிகழ்ச்சியை பற்றி அதிகமாக பேச வைக்கிறார்கள் என்றெல்லாம் கூறி அவர்களை வெளியேற்றுவதில்லை. அந்த வகையில் மாயாவும் நிறைய முறை நாமினேட் ஆகியிருக்கிறார். ரசிகர்களும் மாயா வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் மாயா குறித்து அவரது தங்கை பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் கமலின் வசூல் ராஜா பாடலை போட்டு ‘ முதல் நாளில் இருந்து Pr இல்லை, போலியான Vote இல்ல, அவரின் விளையாட்டை கெடுக்கவோ இல்லை மற்ற போட்டியாளர்களை அசிங்கப்படுத்தவோ பேட்டிகள் கொடுத்தது இல்லை, அவள் உண்மையானவள், அவளின் ஆதரவாளர்கள் உண்மையானவர்கள், வெறும் அன்பிற்காக, மாயாவிற்கு வாக்களித்து அவரை பைனலுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பாடல் வரிகளில் எதிர்கள் சுகம் காண என்ற வரிகள் வரும் போது விஷ்ணு, மணி, ரவீனாவை காண்பித்து இருப்பது தான் ஹைலைட்.

Advertisement