கை மேல பட்டுச்சு… அவ்ளோதான்..! பிரபல சீரியல் நடிகரை மிரட்டிய நடிகை.! புகைப்படம் உள்ளே

0
4270
Actress Latham Rao
- Advertisement -

சீரியல்ல நடிச்சு ஆறு வருஷமாச்சு. மறுபடியும் எப்போ நடிப்பேன்னு தெரியலை. குடும்பம், குழந்தைகள், வொர்க் ஃப்ரம் ஹோம், சினிமா ஷூட்டிங்னு வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்குது” எனப் புன்னகைக்கிறார், நடிகை லதா ராவ். ‘அப்பா’, ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.

-விளம்பரம்-

latha-rao

- Advertisement -

“நீங்க நடிக்க வந்தது எப்படி?”
“வளர்ந்ததெல்லாம் பவானி சாகர். உறவினர் கல்யாணத்துக்காக அப்பாவும் நானும் சென்னை வந்திருந்தோம். வழியில ‘மெட்டி ஒலி’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதைப் பார்க்க போன அப்பாவைத் தேடி நான் போனேன். அப்போ, ‘நடிக்கிறீங்களா?’னு என்னைக் கேட்டாங்க. நான் முதல்ல மறுத்தேன். அப்புறம் ஒப்புக்கிட்டு, அந்தச் சீரியல்ல நடிச்சேன். அப்போ பத்தாவது படிச்சுகிட்டு இருந்தேன். அப்புறம், ‘அப்பா’ உள்பட அடுத்தடுத்து நிறைய சீரியல்கள்ல நடிச்சேன்.”

“கணவர் ராஜ்கமலுடன் காதல் மலர்ந்த தருணம் பற்றி…”

-விளம்பரம்-

“பாலசந்தர் சாரின் ‘றெக்கை கட்டிய மனசு’ சீரியல்ல இருவரும் நடிச்சோம். அதில் ஒருநாள் அவர் என்னைக் கட்டிப்பிடிச்சு புரப்போஸ் பண்ற மாதிரி ஒரு ஷாட். அப்போ, ‘கை ஏதாச்சும் மேல பட்டுச்சு… அவ்ளோதான்’னு ராஜ்கமலை மிரட்டினேன். அவர் பயந்துபோய் தள்ளி நின்னுட்டார். அப்புறம் அந்தக் காட்சியை வேற மாதிரி எடுத்தாங்க. வீட்டுக்கு கிளம்புறப்போ, ‘வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்குங்க’னு சொன்னேன். அது அவருக்கு ஒரு இம்ப்ரஸை ஏற்படுத்தியிருக்கு. அப்புறம் சில முறை என்னை மீட் பண்ணக் கேட்டார். தட்டிக்கழிச்சுகிட்டே இருந்தேன்.

Raj Kamal

ஒருநாள் சங்கடமாகி, ‘பாண்டிபஜார்ல இருக்கேன்’னு சொன்னேன். பத்தே நிமிஷத்துல அங்க வந்துட்டார். ‘உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்கிறப்போ முதல் சாய்ஸ் நானாக இருந்தால் சந்தோஷப்படுவேன்’னு சொன்னார். ‘என்ன புரப்போஸ் பண்றீங்களா?’னு கேட்டேன். ‘ஆமாம்!’னு சொன்னார். அப்படித்தான் எங்க காதல் மலர்ந்துச்சு. ஒருவழியா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணமான பிறகு ஒருநாள், ‘அப்படி எங்கிட்ட என்னங்க உங்களுக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு அவர்கிட்ட கேட்டேன். ‘பாண்டிபஜார்ல மீட் பண்றப்போ, பிச்சைக்காரி மாதிரி இருந்தியே. அந்த எதார்த்தமான மேக்கப் இல்லாத தோற்றம்தான் எனக்குப் பிடிச்சு இருந்துச்சு’னு சொன்னார். ஒருத்தர் கோபமா இருக்கிறப்போ, இன்னொருத்தர் அமைதியாகிடுவோம். அதனால, தினமும் காதலோடு லைஃப் சூப்பரா போயிட்டு இருக்குது. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க சேர்ந்து நடிக்கலை. ‘ஜோடி நம்பர் 1’, ‘மஸ்தானா மஸ்தானா’ நிகழ்ச்சிகள்ல ஜோடியா டான்ஸ் ஆடினோம். சேர்ந்து தொகுப்பாளர்களாக வொர்க் பண்ணியிருக்கிறோம்.”

Advertisement