ரசிகர்களுக்காக தான் 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்கிறோம் – வாதம் செய்த லியோ தரப்பு, நீதிபதி கொடுத்த நச் பதில்.

0
1314
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரிலீசாக இல்லம் சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது.

- Advertisement -

நீதிமன்றத்தை நாடிய படக்குழு :

ஏற்கனவே துணிவு, வாரிசு போன்ற படங்களுக்கு அனுமதி இல்லாமல் அதிகாலை காட்சிகளை திரையிட்ட திரையரங்களின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அபதாரம் விதித்திருந்தது. இனி இந்த மாதிரி எந்த திரையரங்கம் செய்தாலும் சராமாறியாக நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்து.இப்படி ஒரு நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ’ காலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.

இன்று நடைபெற்ற விசாரணை :

இந்த வழக்கு நேற்று விசாரிக்கபட இருந்த நிலையில் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 4 மணிக் காட்சிக்களுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. காலை 9 மணி காட்சிக்குப் பதிலாக 7 மணி காட்சி திரையிடுவது தொடர்பான அனுமதி குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதை நீங்கள் அரசிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

-விளம்பரம்-

கடந்த முறை 4 மணி காட்சியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்தது, லியோ பட ட்ரைலர் வெளியிடபட்ட திரையரங்கில் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. அனைத்து படங்களுக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்குகிறோம். அதன்படி ‘லியோ’விற்கும் வழங்கியுள்ளோம்.  ‘லியோ’ படம் 2.45 மணி நேரம் என்று தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கியிருக்க மாட்டோம். 

No 4 மணி ஷோ :

ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்பது விடுமுறையான சனி, ஞாயிறு, திங்கள் நாட்களில் மட்டும்தான். சாதாரண நாட்களில் இந்த விலக்கு அளிக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், ரசிகர்களுக்காக தான் 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்கிறோம் என்று லியோ தரப்பினர் வாதம் வைத்ததற்கு’ரசிகர்களுக்காக தானே மற்ற அணைத்து கட்சிகளும் திரையிடப்படுகிறது’ என்று நீதி பதி அனிதா கூறியுள்ளார்.

Advertisement