விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைந்துள்ளது.
தலயின் 59 வது படமான இதை முடித்துவிட்டு தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் உருவாகும் ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் நடிகர் அஜித் ஒரு கார் ரேஸராக நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. சமீபத்தில் இந்த படத்தை பற்றிய சில அப்டேட்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய தயரிப்பாளர் போனி கபூர், தமிழ் படம் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கின் போது அஜித் பற்றி தெரிந்துக் கொண்டேன். அவருக்கு ரேஸிங் மற்றும் விளையாட்டுகளில் உள்ள ஆர்வம் பற்றி தெரிந்து ஆச்சர்யத்தில் வியந்தேன். எதிர்பாராத விதமாக த்ரில்லர் படமான தல 60 படத்தில் ஸ்பீடுக்காக அவரது ரேஸிங் ஆர்வத்தை பயன்படுத்துகிறோம். அவரை ஒரு பக்கா ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க ஆசை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் ஒரு ரேஸராக நடிக்க இருப்பதால் தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அஜித் முன்பை விட படு ஸ்லிம்மாக இருக்கிறார்.