உயிருக்கு போராடிய ஹைனாவை மீட்டு உயிரை காப்பாற்றிய Real பார்த்திபன் – மருத்துவர் அசோகன்

0
426
- Advertisement -

உயிருக்கு போராடிய ஹைனாவை மீட்டு மறுவாழ்வு கொடுத்த உண்மையான லியோ பார்த்திபனின் கதை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலிகான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், லியோ படம் உருவான போதும், வெளிவந்த பிறகும் அதிகமாக பேசப்பட்டது ஹைனா குறித்து தான். ஹைனா என்பது கழுதைப்புலி விலங்கு. கழுதைப்புலி லியோ படத்தில் சில காட்சிகளில் வரும். ஊருக்குள் புகுந்த கழுதை புலியை விஜய் காப்பாற்றுவார். அது பார்ப்பதற்கு அப்படியே தத்துரூபமாக இருக்கும். கிளைமாக்ஸில் கூட ஒரு காட்சியில் ஹைனா நடித்து இருக்கும். இந்த நிலையில் நிஜத்திலேயே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் கழுதைப்புலியை காப்பாற்றி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மருத்துவர் அசோகன் அளித்த பேட்டி:

சத்தியமங்கலம் அருகே இறக்கும் நிலையில் உயிருக்கு போராடி இருந்த ஒரு கழுதைப்புலியை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டிற்கு விட்டிருக்கிறார் மருத்துவர் அசோகன். இது தொடர்பாக பேட்டியில் மருத்துவர், கழுதைப்புலி எந்த விலங்கையும் வேட்டையாடாது. அதேபோல கழுதை புலியையும் எந்த விலங்கும் வேட்டையாட முடியாது. இதனுடைய உடலில் இருந்து வரும் ஒரு வித வாசனையால் மற்ற விலங்குகள் பக்கத்தில் வராது. இது ஒரு ஆக்ரோசனமான விலங்கு. இது கடித்தால் பயங்கரமாக வலிக்கும். தப்பிப்பது ரொம்ப கஷ்டமான ஒன்று.

கழுத்தை புலி குறித்த தகவல்:

காட்டில் இறந்த நிலையில் உள்ள விலங்குகள், உடல்நிலை சரியில்லாத விலங்குகளை தான் இந்த கழுதை புலி சாப்பிடும். கழுதை புலி பல் கடினமாக இருப்பதால் எந்த விலங்கின் எலும்பாக இருந்தாலும் கடித்து தூள் தூளாக்கி சாப்பிடும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் தான் கழுதைப்புலிகள் அதிகமாக இருக்கும். இந்தியாவில் தற்போது மொத்தம் 4000 கழுதைப்புலிகள் தான் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதை பார்ப்பது ரொம்ப அரிது. இதன் சிரிப்பு ரொம்பவே தனித்துவமாக இருக்கும். யானை போல கழுதை புலியின் இனப்பெருக்கமும் வித்தியாசமாக இருக்கும். சராசரியாக 20 ஆண்டுகள் உயிர் வாழும்.

-விளம்பரம்-

கழுதை புலி மீட்பு:

மேலும், ஒரு முறை 2017 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் அருகே உள்ள சுஜில் குட்டை என்கிற ஊருக்குள் சுமார் எட்டு வயசு உள்ள ஆண் கழுதைப்புலி புகுந்ததால் மக்கள் அடித்து போட்டு விட்டார்கள். உடல் நலம் சரியில்லாமல் இறக்கும் நிலையில் அந்த கழுதைப்புலி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. பின் நாங்கள் எல்லோரும் நேரில் சென்று பார்த்த போது அது மண்ணுக்குள் ஒரு அடி புதைந்தே கிடந்தது. வலியால் கத்திக் கொண்டிருந்தது.

காது பகுதியில் புழுக்கள் ஊறி, எலும்பும் தொழும் ஆக இருந்தது. கண்களும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. பற்களும் உடைந்தது. இந்த மாதிரியான நிலைமையில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம். அதை நாங்கள் காப்பாற்ற நினைத்தோம்.மருத்துவமனைக்கு அழைத்து வந்து அதற்கு தேவையான ஊசி, மருந்து மாத்திரை எல்லாமே கொடுத்தோம். அது வலியால் கத்தும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு வாரத்தில் ஓரளவு நன்றாக தேறியது. தினசரி ஆண்டிபயாட்டிக் போட்டுக் கொண்டிருந்தோம்.

கழுதை புலிக்கு கொடுத்த சிகிச்சை:

இந்தியாவில் முதல் முறையாக எம்ஆர்ஐ எடுத்த கழுதை புலி இது தான். சரியான சிகிச்சை கொடுத்தோம். ஆறு மாதங்களில் கழுதை புலி நன்றாக உடல் தேறியது. நாங்கள் எடுத்துக் கொண்டு வரும்போது 12 கிலோ எடையில் இருந்தது. சிகிச்சைக்கு பின் அது 45 கிலோவாக மாறியது. அதனுடைய சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதனுடைய உடல்நிலை நன்றாக தேறிய பிறகு மங்கலப்பட்டி பகுதியில் காட்டுக்குள் விட்டோம். இது போன்ற வனவிலங்கு பாதுகாப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement