ஆணாதிக்க பண்ணி, அவனுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்புங்க – கொந்தளித்த வனிதா. இதான் காரணம்.

0
350
- Advertisement -

விஷ்ணுவுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்க என்று வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். பின் 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பின் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். விஜய் வர்மாவின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை ஐந்து பேர் Wild card என்ட்ரி ஆக இருக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் விஷ்ணு குறித்த சர்ச்சை தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் பரீட்சையமான நபர்களில் ஒருவர் விஷ்ணு. இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு:

அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து விஷ்ணு பிற போட்டியாளர்களின் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று அல்டாப் செய்து கொண்டு இருக்கிறார். இதனால் வீட்டில் பல பேருடன் விஷ்ணு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பேட்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

விஷ்ணு செய்த செயல்:

அதில் போட்டியாளர்கள் தங்களுடைய போனை தூக்கி சென்று ஓடி இருந்தார்கள். அப்போது அக்ஷயா தன்னை தள்ளிவிட்டதாக விஷ்ணு பயங்கரமாக கோபப்பட்டு பேசினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது விஷ்ணு, வாடி போடி என்றெல்லாம் பேசி அக்ஷயாவை அடிக்கவும் சென்றிருக்கிறார். இதனால் விக்ரமும் நிக்ஷனும் விஷ்ணுவிடம் சண்டை போட்டு இருக்கிறார்கள். பின் அனைவரும் விஷ்ணுவை கண்டித்து அக்ஷ்யாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். விஷ்ணுவும் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக பேட்டியில் வனிதா விஜயகுமார், நேற்றைய நிகழ்ச்சியில் விஷ்ணு செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

விஷ்ணு குறித்து சொன்னது:

இதை வன்மையாக கண்டிக்கிறேன். விஷ்ணு நிகழ்ச்சியில் வன்முறையாக நடந்திருக்கிறார். கத்துவது, தேவையில்லாமல் வார்த்தைகளை விடுவது என அனைத்து வைலண்டான விஷயத்தையும் விஷ்ணு செய்திருக்கிறார். அக்ஷயா மீது கை வைத்தது அவர் செய்த ரொம்ப பெரிய தவறு. அநியாயத்திற்கு விஷ்ணு ரொம்ப ஓவராக பேசுகிறான். வாடி போடி என்றெல்லாம் பேசியிருக்கிறார். கண்டிப்பாக கமல் சார் விஷ்ணுவை கண்டிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் விஷ்ணுவுக்கு ரெட் கார்ட் கொடுத்து அந்த ஆணாதிக்க பன்னியா வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவன் நிகழ்ச்சியில் செய்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜோவிகா, டா போட்டு பேசியதற்காக சண்டைக்கு நின்றான். அப்படி இருக்கும்போது இவன் எப்படி எந்த உரிமையில் அக்சயாவை டீ போட்டு பேசியிருக்கிறான் என்று கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Advertisement