திரையரங்கில் நான் ரெடி தான் பாடலை கேட்டு அப்சட்டான ரசிகர்கள் – எடிட் செய்யப்படாத பாடலை வெளியிட்ட படக்குழு.

0
109
- Advertisement -

இந்த பாடல் வரிகளின் சர்ச்சைகள் குறித்து லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட பேசி இருந்தார் விஐய். லியோ படத்தில் வெளிவந்த முதல் பாடல் நான் ரெடி தான். இந்த பாடலுக்கு 1300 நடன கலைஞர்களை வைத்து விஜய் நடனமாடிருந்தார். இந்த பாடலானது கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார், இதனால் பாடல் வெளியான போது யூடியூபில் படு பேமஸ் ஆகி இருந்தது. ஆனால் இந்த பாடலில் புகைபிடிக்கும் படியான கட்சிகளும், மது அருந்துவதை பற்றிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.

-விளம்பரம்-

பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் இந்த மாதிரியாக புகைபிடுக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் அறிவுரை கூறியிருந்தனர். குறிப்பாக, அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா விஜய் மீது நடக்கடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து நீதிமன்றமும் நான் ரெடி தான் பாடலில் உள்ள மோசமான வரிகளை நீக்கி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

- Advertisement -

பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்கலின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது.இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி பெரும் வைரலாகி வருகிறது. மேலும், இந்த விழாவில் சில சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் நான் ரெடி தான் பாடல் சர்ச்சை குறித்து பேசிய விஜய் பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு லைன் கட் ஆச்சு… விரல் இடக்குலனு ஒரு வரிய தூக்கினாங்க. அதை ஏன் சிகெரட்ன்னு நினைக்கிறீங்க… அதுல தீர்ப்பை மாத்தி எழுதுற பேனாவாக கூட இருக்கலாம்… அண்டால குடுக்கிறது கூழ்ழாக கூட இருக்கலாம். இது மாதிரி மலுப்பலான பதில நான் சொல்லலாம். ஆனா சினிமாவை சினிமாவா பாருங்க.

ஒரு நெகடிவ் கதாபாத்திரத்திற்கு தேவையான விஷயங்கள் வச்சாங்க. அதெல்லாம் நீங்க எடுத்துக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும். ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் ஒயின் ஷாப் இருக்கு.அவங்க என்ன ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு போறாங்களா. அவங்கெல்லாம் ரொம்ப தெளிவு’ என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சர்ச்சிக்குரிய வரிகளுடன் நான் ரெடி தான் பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிபடுத்தி இருக்கிறது.

Advertisement