இந்திராகாந்தி கையால் விருது, தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்கள். என்ன ஆனார் இந்த பாடகி

0
459
- Advertisement -

உஷா உதூப் மிகப் பிரபலமான பொப்பிசைப் பாடகி. இவரது தந்தை தமிழ் நாட்டைச் சார்ந்த சாமி ஐயர். ஒரு பொலீஸ் உத்தியோகஸ்தர். மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்தார். இவர் பிறந்தது சென்னையில். கல்வி கற்றது மும்பையில். இவரது மூத்த சகோதரி இந்திரா ஸ்ரீநிவாசன். அடுத்தவர் உமா. இந்திரா பெங்களூருவில் வசித்து வருகிறார். மற்றொருவர் மாயா சாமி. சகோதரர்கள் இருவர். உஷா உதூப்பின் குடும்பம் ஒரு பிராமணக் குடும்பம்.பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது சங்கீத வகுப்பில் இவரது கனத்த குரலால் இவரது குரல் சரியில்லை என்று ஆசிரியையால் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

ஆனால் அதே ஆசிரியை பிற்காலத்தில் இவரது பாடல்களைக் கேட்டு கைதட்டும் நிலையும் உருவானது. சென்னையில் சில காலம் இருந்தவர் இங்கு தான் இவருக்கு பாடும் வாய்ப்பு கிட்டியது. நைன் ஜெம்ஸ் என்ற நைட் கிளப்பில் பாடுவதற்காக இவரை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஒரு ஆங்கிலப் பாடலைப் பாடினார். மாதம் ரூ.1500/-சம்பளத்தில் இவர் பாடகியானார். பாடகியானார் என்பதைவிட நைட் கிளப் ராணியானார் என்பதே சரி. ஆனால் இந்த நைட் கிளப்பிலும் இவருக்குப் பிடித்த உடையான மஞ்சள் வண்ணத்தில் காட்டன் சேலையில் தான் பாடினார்.

- Advertisement -

எத்தனையோ வெளிநாடுகளுக்கு இவர் பாடச்சென்று பாடியிருக்கிறார் என்றாலும், இதே சேலை அணிந்துதான் பாடி வருகிறார். சென்னைக்குப் பின் கொல்கொத்தாவிற்குச் சென்றார். அங்கு சுமார் 2 வருடங்கள் டிரிங்காஸ் என்ற கிளப்பில் பாடினார். இங்குதான் இவரது பாடலைக் கேட்பதற்கென்று தினமும் ஒருவர் வருவார்.நீண்ட நேரம் அமர்ந்திருந்து இவரது பாடல்களை ரசித்துக் கேட்பார். பின்னாளில் அவர்தான் உஷா கணவரானார். அவர்தான் ஜானி உதூப்.

இவர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தாவில் ரூ.750 மாதச் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். கிடைக்கும் சம்பளம் முழுவதையும் இவரது பாடல் கிளப்பிற்குச் சென்று மது அருந்தி தீர்ப்பார். அவ்வாறு தினமும் சென்று வந்தபோது உஷாவிற்கு அவரைப் பிடித்துப் போக அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் உதூப் ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் நாளடைவில் ஏற்றுக்கொண்டார். தனது வருங்கால கணவருடைய செலவுகளுக்கே தனது பெரும்பாலான சம்பளத்தை வழங்கினார். இவ்வாறு 1969 ஆம் ஆண்டு உருவான காதல் 1971 இல் திருமணத்தில் முடிந்தது.

-விளம்பரம்-

இத்தம்பதியருக்கு சண்ணி என்ற ஒரு மகனும், அஞ்சலி என்ற ஒரு மகளும் உள்ளனர். அத்துடன் ரியாத் என்ற ஒரு பேரனும் ஆயிஷா என்ற ஒரு பேத்தியும் உள்ளனர். உஷா உதூப், மகள், பேத்தி ஆகியோர் இப்போது ஒரே மேடையில் இசைக்கச்சேரிகளில் பாடி வருகின்றனர். திருமணத்திற்குப் பின் டெல்லிக்குச் சென்றார். அங்கு ஒபேரா ஓட்டலில் பாடினார். கொல்கத்தாவில் ஆரம்பத்தில் 1500 மாத ஊதியத்தில் பாடி வந்தவர் இந்த கிளப்பில் பாடிய போது மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வாங்கினார்.

இவர் ஒரு முறை ஒபேரா ஓட்டலில் பாடிக்கொண்டிருந்த போது இந்தியில் பிரபல இசையமைப்பாளராக இருந்த ஆர்.டி.பர்மன், இந்தி சூப்பர் ஸ்டார் தேவ் ஆனந்த் ஆகியோர் இவர் பாடியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததோடு தேவ் ஆனந்த் தன்னுடைய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் பாட முடியுமா என்று கேட்க இவரும் ஒத்துக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் இவரைப் பாடவிடாது ஆஷா போன்ஸ்லே பாடல்களைப் பாடினார். ஆனால் இதே படத்தின் ஆங்கில பாகத்தில் தம் மேரா தம் பாடலை உஷா உதூப்பே பாடினார்.

பின்னர் அதே ஆர்.டி.பர்மன் இசையில் ‘ஷாலிமார்’ என்ற இந்திப் படத்தில் பாடினார். தொடர்ந்து இந்தியில் ஷான், டான், வார்தாத், பியாரா துஷ்மன், அர்மான், டிஸ்கோ டான்சர் போன்ற பல படங்களில் பாடினார். இவற்றில் டிஸ்கோ டான்சர் படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இசையமைப்பாளர்கள் பப்பி லஹரி இரட்டையர்கள் அவர்கள் இசையமைக்கும் பல படங்களில் இவருக்கு உரிய வாய்ப்பை வழங்கினர்.

மலையாளத்தில் இவர் முதன் முதலாக பாடியது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டக்காரி’ என்ற படத்தில் ஜி.தேவராஜனின் இசையமைப்பில். பாடல் காட்சியில் நடித்தவர் நடிகை லட்சுமி. தமிழில் இவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியவர் பிரபல இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் . ‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் 1975-இல் “Love is beautiful” என்ற பாடலைப் பாட வாய்ப்பை வழங்கினார். பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. கமலஹாசனும் இவரும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.

கமலஹாசனுடன் ஒரே பைக்கில் அமர்ந்து மெரீனா கடற்கரைக்குச் சென்று சுண்டல், கிளி மூக்கு மாங்காய் (ஒட்டு மாங்காய்) வாங்கி சாப்பிடுவதுண்டு. பத்மஸ்ரீ விருது உஷா உதூப்பிற்கு அறிவிக்கப்பட்ட தகவலை முதன் முதலாக உஷாவிற்குச் சொன்னவர் கமலஹாசன். மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். தற்போது 67 வயதாகிறது. 44 வருடங்களாகப் பாடி வருகிறார். பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனது கணவருக்காக அசைவம் சமைக்கக் கற்றுக்கொண்டார். அத்தனையும் சமைப்பார். ஆனால் அசைவம் உண்பதில்லை. தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

Advertisement