யார் கூட டைலாக் பேசணுமோ அவன மட்டும் விட்டுட்டு மத்த பேர எல்லாம் கொன்னுடுறாரு – லியோ படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.

0
761
Bluesattai
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் விமர்சனத்தை செய்துள்ளார் மாறன்.

- Advertisement -

அதில் பேசியுள்ள அவர் ‘எத்தன பேர் வந்தாலும் ஹரோ தூக்கி போட்டு அடிக்கிறாரு.ஒரு 1000 பேர் வந்தாலும் அடிக்கிறார். யார் கூட டைலாக் பேசணுமோ அவன மட்டும் விட்டுட்டு மத்த பேர எல்லாம் கொன்னுடுறாரு. ஆனா அவனையும் டைலாக் பேசிட்டு கொன்னுடுறாரு. ஒரு படம் நல்லா இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் வில்லன் கதாபாத்திரங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவும் ஒர்க் ஆகவில்லை.

வில்லன்கள் புத்திசாலியாக இருந்தால் பரவாயில்லை முட்டாப் பயலாக இருக்கிறான் மூடநம்பிக்கை உள்ளவனாக நர பலி கொடுத்துட்டு இருக்கான். இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த LCU பாய்ஸ் , ம்,ம்,,,,,முட்டு பாய்ஸ் என்னலாம் பண்ண போறாங்கன்னு தெரியல. அதிலும் Cameo ரோலில் வரும் கமல் வாய்ஸ் விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பது போல கதை என்னனு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்கு.

-விளம்பரம்-

படத்தில் உருப்படியான விஷயம் என்னவென்றால் அந்த ஹைனா வரும் காட்சிகள் இருக்கிறது. அந்த கஷ்டமான விஷயத்தை நன்றாக செய்துவிட்டு கார் சேஸிங் காட்சியை மிகவும் கேவலமாக எடுத்து இருக்கிறார்கள் மேலும் காபி ஷாப் சண்டை ரசிக்கும் படியாக இருந்தது. மற்றபடி சம்பளம் எல்லாம் போயி மிச்ச சொச்ச காசில் படத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள்.அதிலும் சிகிரெட் பேக்டரி என்று சொல்லி ஒரு லேத்து பட்டறையை காண்பித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான் வாழ்நாளில் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார். இது அவருடைய ஐந்தாவது திரைப்படம், இந்த படமே கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதையாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு குறியீடாக கூட ஒரு கழுதை புலியை வைத்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போதே இனி வாழ்நாளில் கைதி மாதிரி ஒரு படத்தை இவர் கொடுக்க மாட்டார் என்பதை நம்பலாம். இவருடைய அடுத்த லைனைப்பில் இருப்பது டலைவருடைய படம் தான். டலைவரை போடுவதற்கு இப்போதைக்கு சார்ப்பாக இருப்பது இவர்தான். இதே Formல் போய் டலைவரை அட்டாக் பண்ணிடுங்க.

Advertisement