தனுஷ் வந்த அப்புறமும் சிம்பு நடிக்கறதா இருந்தது, ஆனால், அவர் நடிக்க முடியாமல் போனதுக்கு காரணம் இதான் – வெற்றிமாறன் சொன்ன காரணம்.

0
309
vetri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார். இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கினார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்களில் வடசென்னை ஒன்று. தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் 2 ஆம் பாகத்தின் பணிகளை வெற்றிமாறன் துவங்கி விட்டார். மேலும், அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது வடசென்னையை சேர்ந்த ஒருவர் இந்த கதையை வெற்றிமாறனிடம் கூறியுள்ளார் .

- Advertisement -

வடசென்னை படம் உருவான விதம்:

அது வெற்றி மாறனுக்கு பிடித்து போய்விட அந்த கதையை தனுஷிடம் வெற்றிமாறன் கூறியுள்ளார் . தனுஷும் பிற்காலத்தில் இந்த படத்தை உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், படத்தின் படத்தின் பட்ஜெட் , நடிகர்கள் உட்பட பல காரணங்களால் இதை அவர்களது முதல் படமாக உருவாக்கவில்லை. அதன் பின்னர் தனுஷ் பிஸியாகிவிட இந்த படத்தை சிம்புவை வைத்து பண்ணலாம் என்று திட்டமிட்டார் வெற்றிமாறன். இந்த படத்தின் கதையை சிம்புவிடம் சொல்லியுள்ளார். சிம்புவும் ஓகே சொன்னார். ஆனால், சிம்புவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

வடசென்னை படத்தில் சிம்பு விலகல்:

அதற்கு பிறகு தான் தனுஷ் நடித்தார். மேலும், வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க இருந்த தகவல் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது குறித்து பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க இருந்தது உண்மை தான்.

-விளம்பரம்-

சிம்பு விலகிய காரணம்:

அப்போது சிம்பு காளை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நாங்கள் ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். அப்படித்தான் வடசென்னை படத்தை பற்றி பேசினோம். சிம்புவும் நடிக்க ஓகே சொன்னார். பிறகு திடீரென்று சிம்பு வெளிநாடு சென்றுவிட்டார். அங்கே அவர் மூன்று, நான்கு மாதம் தங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் கிளௌட் 9 தயாரிப்பில் உருவாக இருந்ததால் படத்தை சீக்கிரமாக எடுக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினார்கள். அதனால் நாங்கள் தனுஷை வைத்து படம் பண்ண ஆரம்பித்தோம்.

வைரலாகும் வெற்றிமாறன் அளித்த பேட்டி:

அதுமட்டுமில்லாமல் சிம்புவை வைத்தும் பண்ணலாம் என்று நினைத்தோம். ஆனால், படத்தில் ஏற்கனவே பல பெரிய பெரிய நடிகர்கள் இருப்பதால் கதையை மாற்றி எழுதினோம். அதனால் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரம் சின்னதாக வந்தது. இது சிம்புவிற்கு நன்றாக இருக்காது என்று நினைத்து தான் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை போலவே அமீர் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement