பல சீரியல்களில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா ? 90ஸ் கிட்ஸ்களுக்கு தெரியும். இவர் இப்போ என்ன செய்கிறார் தெரியுமா ?

0
384
Kovai Anuradha
- Advertisement -

வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் ஜொலித்தவர் கோவை அனுராதா. இவர் பல சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளிலும் இவர் நடித்த நாடகங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல தொடர்களை இயக்கியும் இருக்கிறார். மேலும், இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் என பட்டம் பெற்றவர். இவருடைய நடிப்பு திறமைக்கு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்று இருக்கிறார். இவர் பல நூல்களையும் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழ்பெற்ற கலைமாமணி கோவை அனுராதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் அனுபவம் குறித்து கூறியிருப்பது, நான் பத்து வயதில் இருந்தே நடிக்கிறேன். என்னை சுற்றி எப்போதும் பசங்க இருந்து கொண்டே இருப்பார்கள். நான் எந்த படத்துக்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடித்துக் காட்டுவேன். பாலும் பழமும், பாசமலர் எனும் பா வரிசை படங்கள் எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். எம்ஜிஆர், சிவாஜி இரண்டு பேருமே என்னுடைய உயிர். மாதிரி எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் நல்ல விஷயங்களை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

கோவை அனுராதா அளித்த பேட்டி:

அவர் படங்கள் பார்க்கும்போது அவ்வளவு விஷயங்கள் புரியும். நான் ஸ்கூல் படிக்கும்போது சிவாஜி, எம்ஜிஆர் சாரும் இறந்த பிறகு நாம உயிரோடவே இருக்கக் கூடாது என்றெல்லாம் பேசி இருக்கேன். அந்த அளவிற்கு அவர்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு. அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பின்னாடி சினிமாவே இல்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். எம்ஜிஆர் சாரை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவரை நேரில் பார்த்த சமயம் கடவுளை நேரில் பார்த்த அளவுக்கு சந்தோசமாக இருந்தேன். அதேபோல் சிவாஜி சார் மாதிரி யாராலும் நடிக்கவே முடியாது.

கோவை அனுராதா நாடக அனுபவம்:

அவருக்கு பிறகு யாராவது அப்படி நடிப்புத் திறன் உள்ளவர்கள் வந்தார்களா என்று சொன்னால் எனக்கு தெரியவில்லை. நான் பாலச்சந்தர் சாருடைய நாடகம் பார்த்து தான் நாடகம் போட ஆசை வந்தது. பின் 1965ல் எழுத்தாளர் ஏகாம்பரம் என்ற ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் கோயம்புத்தூரில் நண்பர்கள் கலை பண்பாட்டு குழு என்று ஆரம்பித்தேன். கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து நாடகம் போட்ட ட்ரூப்பில் நாங்களும் உண்டு. எங்கள் நாடக குழு பற்றி எல்லா பத்திரிகைகளிலும் எழுதுவார்கள். என் தம்பிங்க நடிக்க ஆர்வமாக இருந்தார்கள். நான் எழுத ஆர்வமாக இருந்தேன்.

-விளம்பரம்-

நாடக குழு குறித்து சொன்னது:

அப்படியே எதார்த்தமாக எங்களுடைய ட்ரூப் அமைந்துவிட்டது. என்னோட நாடகத்தில் ஆபாசமாக எழுத மாட்டேன், பெண்களை மட்டமாக எழுத மாட்டேன். அப்படி எல்லாம் இல்லாமல் நகைச்சுவை கொண்டு வருவது ரொம்பவே கஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால், நான் அப்படி எழுதி மக்களை சிரிக்க வைத்திருக்கிறேன். என்னோட பலமே என்னுடைய பாடி லாங்குவேஜ் தான். பாடி லாங்குவேஜ் மூலமாக சுலபமாக மக்களை சிரிக்க வைத்து விடுவேன். என்னோட எல்லா நாடகத்திலும் கருத்து நிச்சயமாக இருக்கும். ஏன்னா, நான் எம்ஜிஆர் சாருடைய வழியை பின்பற்றி வந்தவன். அப்படியே சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.

கோவை சரளா குறித்து சொன்னது:

அதேபோல் காமெடி நடிகை கோவை சரளா எங்க ட்ரூப்பை சேர்ந்தவர் என்பதில் எனக்கு மிகப் பெரிய பெருமை. ரொம்ப திறமையான பொண்ணு. எங்க ஸ்டேஜ் டிராமாவில் இருந்த பொண்ணு இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்று சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது. இப்ப வரைக்கும் நாங்கள் எல்லோரும் தொடர்பில் தான் இருக்கிறோம். இப்போதும் மாதத்திற்கு ஒரு நாள் நாடகங்கள் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன். சினிமாவில் 4,5 நாள் சூட்டிங் இருந்தால் அதுவும் சென்னையிலேயே இருந்தால் பண்ணலாம் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement