ஏ ஆர் ரகுமான் ஸ்டூடியோவில் நேர்ந்த விபத்து – 40 அடி உயரத்திலிருந்து விழுந்த லைட்மேன் பலி

0
418
arrahman
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறது. பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடதொடங்கினார் ரகுமான் . தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்று குறிப்பிடத்தக்கது. பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

ஆஸ்கார் நாயகன் :

மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். மேலும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார். இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார்.

ஏ.ஆர் ரகுமான் பிலிம் சிட்டி :

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனக்கென்று சொந்தமாக ஒரு ஸ்டூடியோ வைத்திருக்கிறார் அங்கு தான் தற்போது கோரா விபத்து ஓன்று நடந்துள்ளது. அதாவது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர் ரகுமான் பிலிம் சிட்டியில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு குழுவில் லைட் மேன் குமார் என்பவர் படப்பிடிப்புக்காக உயரத்தில் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

-விளம்பரம்-

லைட் மேன் உயிரிழப்பு :

அப்போதுதான் இந்த கூற விபத்து நடந்துள்ளது. லைட் மேன் குமார் 40 அடியில் மின் விளக்குகளை பொருத்தும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இந்நிலையில் இவரை பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்து விடத்தாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வருகின்றனர். ஏஆர் ரகுமான் பிலிம் சிட்டியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement