6 மாத சிறை தண்டனை தீர்ப்பு – இயக்குனர் லிங்குசாமி விளக்கம்.

0
427
Lingusamy
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
lingusamy

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். ஏற்கெனவே, தமிழில் லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படமும் காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

- Advertisement -

லிங்குசாமி இயக்கும் அடுத்த படம் :-

தற்போது இந்த படம் வெளிவந்து ரசிகர்களின் நல்ல வரேவேற்பை பெற்றுற்ள்ளது. இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், லிங்குசாமியின் சகோதரரும், திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆன சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்கள்.அதில் அவர்கள், ரன் படத்தின் பார்ட்-2 விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 2002ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் ரன்.

ரன் 2 படத்தின் தகவல் :-

இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் தான் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன் சாக்லேட் பாயாக இருந்த மாதவனை இந்த படம் மூலம் ஆக்ஷன் நாயகனாக மாற்றியது. இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது 20 வருடங்கள் கழித்து லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

6 மாத சிறை தண்டனை :-

2014 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தா இவர்களது நடிப்பில் எண்ணி ஏழு நாட்கள் என்ற திரைப்படத்தை லிங்குசாமி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதனால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரூபாய் 1.03 கோடி கடனாக வாங்கி இருந்தார்களாம். இந்த கடனை திரும்ப கொடுக்கும் விதத்தில் லிங்குசாமி செக்காக செலுத்தியிருக்கிறார் ஆனால் லிங்குசாமி கணக்கில் பணம் இல்லாததாகவும். அதனால் செக் பவுன்ஸ் ஆனதால் பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் லிங்குசாமி மற்றும் அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்கு தொடர்ந்தது.

லிங்குசாமி விளக்கம் :

இந்நிலையில் சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் லிங்குசாமிக்கும் அவரது சகோதருக்கும் ஆறு மாத கால சிறை தண்டனை பண மோசடி வழக்கில் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்னைப் பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement