தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், லால், சுமன் ஷெட்டி, கருப்புசாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்தப் படத்தில் ஹீரோவாக முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். இது குறித்து இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பது, இந்த படத்தில் நாங்கள் முதலில் சூர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்தோம். பின் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. பின் நான் விஜயிடம் இந்த படத்தின் கதையை சொன்னேன். அவர் முதல் பாகம் மட்டும் தான் கேட்டார். இரண்டாவது பாகம் சொல்லும் போது வேணாம் விடுங்க சார் எனக்கு இந்த படத்தில் நடிக்க உடன்பாடில்லை என்று சொன்னார். நானும் இல்லை சார் இரண்டாம் பாகம் கேளுங்கள் என்று சொன்னேன்.
அதற்கு விஜய் இல்லைங்க முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அப்பா கதாபாத்திரத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் போல இருக்கு. வேற ஏதாவது பேசுங்கள் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு தான் இந்த படத்தில் விஷாலை வைத்து எடுத்தோம். இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. மேலும், இந்த படத்தின் வெற்றி விழாவிற்கு விஜய் வந்திருந்தார். அவர் வந்து என்னிடம் கை கொடுத்து வேற லெவல்ல படத்தை கொண்டு போய் விட்டீர்கள் சார், சூப்பர் என்று சொன்னார்.
வீடியோவில் 14 நிமிடத்தில் பார்க்கவும்
அதற்கு நான் நீங்கள் தான் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே என்று சொன்னேன். இதற்கு விஷால் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும். இந்த கதாபாத்திரம் அவருக்கு ஏற்றது என்று விஜய் கூறியிருந்தார். தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.