ஆபத்தான அதிக கதிர்வீச்சை வெளியிடும் போனில் Xiaomi, OnePlus, Iphone.! ஆய்வில் வெளியான அதிர்ச்சி.!

0
1531
Phone-emitation
- Advertisement -

தற்போதைக்கு, செல்போன்களின் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாடு எவ்வளவு என்பதை அளவிட உலகம் முழுவதுக்குமான பொதுவான ஒரு அளவீட்டு முறை எதுவும் இல்லை என்றபோதிலும், கிலோவுக்கு 0.60 வாட்ஸ் என்ற கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானது என டியஎ புளூ ஏஞ்சல் என்ற ஜெர்மனைச் சேர்ந்த சூழலியல் நேச அமைப்பின் அளவீடு தெரிவிக்கிறது. ஆனால், இப்போது உள்ள செல் போன் நிறுவனங்கள் அதனை பின்பற்றுகிறதா. இல்லை என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

-விளம்பரம்-

நீங்கள் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தை பார்த்திருக்கிறீர்கள் என்றால் இந்த கதிர்வீச்சு வெளிப்பாடு பற்றி பெரிதாக விளக்க தேவை இல்லை. அந்த படத்தில் எப்படி அதிகப்படியான கதிர் வீச்சால் பறவைகள் பாதிக்கபடுகின்றனரோ அதே போன்று தான் நாம் பயன்படுத்தும் சில போன்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சினால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து வருகிறோம்.

- Advertisement -

சமீபத்தில் செல்போன்களின் கதிரியக்க வீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை குறித்து ஜெர்மனியின் ஃபெடரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜியோமி மற்றும் ஒன் ப்ளஸ் ஆகிய 2 சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் செல்போன்கள் அதிக கதிர்வீச்சு உள்ள செல்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

அதிக கதிர் வீச்சை வெளியிடும் போன்கள் :

-விளம்பரம்-

மேலும், உலகின் தலை சிறந்த செல் போன் நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனமும் இந்த பட்டியலில் அடக்கம். அதிக கதிர் வீச்சுக்கள் கொண்ட போன்களில் முதலாவதாக ஜியோமியின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் எம்.ஐ.ஏ.ஒன் போனும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு போன்களும் மிக மோசமான அளவுக்கு கதிரியக்க வீச்சை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கதிர் வீச்சை வெளியிடும் போன்கள் :

இவற்றைத் தொடர்ந்து ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான 5டி ஸ்மார்ட் போன் இடம்பெற்றுள்ளது. மேலும். இந்த ஆய்வை நடத்திய அதே நிறுவனம் குறைந்த கதிர்வீச்சை வெளிப்படுத்தும் செல் போன்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலும் சாம்சங் போன்கள் இடம் பெற்றுள்ளது.

Advertisement